ஒன்று சுயபுத்தி வேண்டும் இல்லையென்றால் சொல் புத்தியாவது வேண்டும், இரண்டுமே இல்லாமல் , நதியில் குளிக்கையில் சிறுநீர் கழித்தற்காக தையல் போடும் அளவு முட்டிக் கொள்வது, அவனை ‘மானங்கெட்டவன்’ என வேறு மொழியில் திட்டியதற்கு பாரத் மாதாக்கி ஜெய் என கூச்சலிடுவது போன்ற முட்டாள்தனங்களைக் வெளிகாட்டிக் கொண்டே இருந்தால் சாகரிகா என்ன தான் செய்வாள்! (சமகால அரசியலையும் நாசூக்காய் உள்ளே நுழைத்து விடுகிறார் எழுத்தாளர் , ‘கிடைக்கிற gap-ல எல்லாம் ஆப்பு வெக்கிறியே சிவாஜி’)
ஆனால் இதையெல்லாம் சாகரிகா நீல நகர வெண் பலகையில் தொடராய் எழுதுகிறாள் என்ற செய்தியைப் படித்ததும் கோவிந்தசாமி மீது சற்று இரக்கம் எட்டிப் பார்க்கிறது! சமூக ஊடங்களால் நடக்கும் விபரீதங்களின் வித்து இது தான்! ஒருவரைப் பற்றிய விடயத்தை அவருக்கு தெரியாமலேயே பொது மக்களிடம் ஒருதலையாய் முன் வைக்கும் சோகமான நிலை! சாகரிகாவிடம் நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை!
சூனியனும் நிழலும் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!