அனுபவம்

கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 4)

முதல் மூன்று அத்தியாயங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது இந்த அத்தியாயம்.
மாயாஜால உலகில் இருந்து யதார்த்த உலகிற்கு நம்மை அழைத்து வருகிறார் ஆசிரியர்.
மரண தண்டணையில் இருந்து தப்பித்த சூனியன் நீல நகரத்தில் சுய சிந்தனையற்ற மற்றும் சுயபச்சாதாபம் மிகுந்த மனிதனான கோவிந்தசாமியின் மண்டை ஓட்டிற்குள் நுழைகிறான்.
கோவிந்தசாமியின் இளமைப் பருவம் அத்தனை சுவாரஸ்யமானதாக இல்லை. கோவிந்தசாமி தன் ஏழாவது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தாயை விட்டு விலகுகிறான்.அவன் தாய் அவனுக்கு கற்றுக் கொடுத்த ஒரே நல்ல விஷயம் கடவுள் நம்பிக்கை மட்டுமே.
எந்த ஒரு வேலையிலும் நிலையாக இல்லாமல் நாடோடியாக கிடைத்த வேலையை செய்துக்கொண்டே பத்தாம்வகுப்பு வரை படிக்கிறான்.
சுய சேவகர் ஒருவரின் மூலம் அவன் ஒரு இந்து என்ற உணர்வு ஊட்டப்பட்டு, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட, தானே சுட்டெடுத்த இரண்டு செங்கற்களுடன் அயோத்திக்கு பயணிக்கையில் வருங்கால மனைவி சாகரிகாவை சந்திக்கிறான்.
பத்திரிகையாளரான சாகரிகா செய்திகள் சேகரிக்கும் பொருட்டு அயோத்திக்கு பயணிக்கிறாள்.
இந்துத்துவத்தை பற்றிய மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட இருவருக்கும் இடையில் ஒரு அசாதாரணமான சூழலில் காதல் பிறக்கிறது.
கடவுள்களுக்கு கோயில் கட்டுவதையே தன்னுடைய வாழ்வின் இலட்சியமாக கொண்ட கோவிந்தசாமி, சிறுவயது முதல் பத்திரிகையாளராக வேண்டும் என்ற கனவு கொண்டு, அதை நனவாக்கிய சாகரிகா இருவருக்குமான திருமணம்…..?
ஒருவேளை இது அந்த… சங்கியின் வாழ்க்கையாக இருக்குமோ… பொறுத்திருந்து பார்ப்போம்.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி