மனிதர்களுள் சிலர் இணைந்து வாழ்ந்தாலும் தனித்துதான் இருக்கிறார்கள். அது போல்தான் நீல நகரத்தில் வசிப்பவர்களும் உள்ளார்கள். அவர்கள் பேச்சினை அடக்கி எழுத்தின் வழியே தன் பேச்சினை பரப்புகிறார்கள்.இந்நகரத்தில் நம் கோவிந்தசாமி படும் பாட்டைக் கண்டு மனம் வருந்துகிறது. தனக்கு இழைக்கப்படும் துன்பத்திற்கு வழி தேடுகிறான். எல்லாம் அவனுக்கு எதிராகவே செயல்படுகிறது. இயற்கை கூட அவனுக்கு கைக்கொடுக்கவில்லை. கைவிட்டு விடுகிறது. தனக்கு எதிராக செயல்படும் நபர் யார் எனக் கண்டுபிடிக்க முடியாமல் துயரத்தின் எல்லைக்கு சென்று ஓடுகிறான். மனிதர்களின் குணநலன்களை இந்த அத்தியாயத்தின் வழியே ஒவ்வொரு வரிகளின் வழியே திரு.ராகவன் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.