சில அத்தியாயங்களுக்கு முன் மழையில் நனைந்து மயக்க நிலையில் கிடந்த கோவிந்தசாமியின் கதி என்னவாயிற்று? என்பதற்கான விடை மந்திரமலரில் மலர்ந்திருக்கிறது.
கோவிந்தசாமியின் கனவில் வரும் சாகரிகா அவன் கனவிலும் நினைத்திராத படி இருக்கிறாள். கனவிலும் கூட அவளின் அன்பிற்காக ஏங்குபவனாகவே கோவிந்தசாமி இருக்கிறான். கனவில் வந்து கலைந்து செல்லும் சாகரிகாவுக்காக கண்ணீர் சிந்தும் கோவிந்தசாமிக்கு ஆறுதல் தருகிறாள் மருத்துவமனை செவிலி. அதோடு அவள் தரும் யோசனை கோவிந்தசாமியையும் நீலநகர வனத்திற்கு வர தூண்டுகிறது. தூண்டல் துலங்கியதா? என்பது இனி தான் தெரிய வரும்.
”நீலநகரத்தில் நீர் நிலைகளில் தலைகீழாக நின்றாலும் ”தாமரை” பூக்காது”, ”என்னை ஒரு தேசியவாதியாகவே உணர்கிறேன், கருப்பும்”, சிவப்பும் சகிக்க முடியாத நிறம்” என கதாபாத்திரங்கள் ஊடாக ஓடும் இழைகள் இலை மறைக் காயாக பா.ரா.வின் நிலைப்பாட்டை சொல்லி விடுகிறது. இன்றைய எதார்த்தத்தமாகவும் இருக்கிறது!
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.