சாகரிகாவுக்குக் கோவிந்தசாமிக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவனை பிறர் விரும்பக் கூடாது. அவனுக்கும் யாரையும் பிடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள் என்பது தெளிவாகிறது. அவனைப் பிடிக்கவில்லை என்று கூறி அவனை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறாள். இது மனித இயல்புதான். இதை மாற்ற இயலாது.நமக்கு ஒருவரைப் பிடித்திருந்தாலும் பிடிக்காமல் இருந்தாலும் அவர்களை நம் எண்ணத்தைச் சுற்றியே சுற்ற வைத்துக் கொண்டிருப்போம்.
அதுல்யா எனும் பேரகிழகியைச் சந்திக்க வேண்டும் என எண்ணுகிறாள். கோவிந்தசாமி அழகின் பின்னே செல்லுவது ஆதிகாலம் முதற்கொண்டே வழங்கி வந்ததை அவனது வார்த்தைகளின் வழியே அறிய முடிகிறது.கோவிந்தசாமியின் நிழலும் அவனுக்கு சளைத்தது இல்லை என்பதை ஒரே நேரத்தில் சாகரிகாவையும் ஷில்பாவையும் காண்பதைக் கண்டு அறிய முடிகிறது. நீல நகரத்தின் சொல் வாழ்க்கை முறையையும் அந்நகர மக்கள் வாழும் முறையையும் பா.ராகவன் அவர்கள் அழகாக விளம்பியுள்ளார்.