கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 23)

சூனியன் விருட்சத்தைப் பற்றியும் பழங்களைப் பற்றியும் கூறும் பொழுது அதனை நேரில் காண வேண்டும் என்ற ஆவலே எழுகிறது. தனக்கான உலகம் வேண்டுமென்ற அவனது உடல் முழுவதும் நிறைந்த எண்ணத்தினை அவன் செயல்படுத்த வேண்டும் என்று அவன் கொள்ளும் செயலானது அசுர வேகமானது. மனித மனமானது ஒன்றிலிருந்து ஒன்று தாவிக் கொண்டிருக்கும். சாகரிகாவைப் பற்றிய செம்மொழிப்ரியாவின் செய்தி நீல நகரம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த வேளையில் ஸபோடில்லாவானது செம்மொழிப்ரியாவாவது ஒன்றாவது என்று தூசு தட்டி விட்டுச் சென்றது.
சூனியன் வேரையும் பழத்தையும் கொண்டு உருவாக்க உள்ள புது வகையானது அனைவரையும் விட தன்னை மேம்பட்டவானாக மாற்றும் என்று மனக்களிப்பில் அவன் செல்லும் காட்சியைக் காணும் பொழுது அனைத்தும் நிகழ்ந்து விடுமோ என்ற ஆவலை பா.ராகவன் அவர்கள் உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு பகுதியும் என்ன நடைபெறுமோ என்ற ஆவலை உருவாக்கக் கூடிய பகுதியாக சென்று கொண்டிருக்கின்றன.
Share
By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me