கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 24)

ஒவ்வொரு அத்தியாயங்களிலும் புதிய கதாப்பாத்திரங்களைக் காண முடிகிறது. இந்த அத்தியாயத்தில் அதுல்யா எனும் பாத்திரத்தைக் காண முடிகிறது. அவளுடைய வாழ்க்கையானது துன்பத்தில் தொடங்குகிறது. ஆனால் காலம் செல்ல செல்ல உச்சத்தை அடைகிறது. தன்னுடைய பூர்வீகத்தைக் காணச் செல்ல முற்படும் நம்முடைய கோவிந்தசாமியைக் காண்கிறாள். கோவிந்தசாமி அவளைக் காணும் பொழுது தன் மனைவியைக் கொண்டே அவளை ஒப்பிடுகிறான். அவனுடைய பேச்சினை மிக இயல்பாகவே எடுத்துக் கொள்கிறாள். அவளிடம் அவன் புதுச்சேரிக்கு வந்த காரணத்தைக் கூறுகிறான். வேறெந்த பெண்ணிடமும் அவள் அதிகமாகப் பேசாதவன் அதுல்யாவிடம் அளவிற்கு அதிகமாகப் பேசுவது ஆச்சரியம் அளிக்கிறது. புதுச்சேரிக்கு அவன் எதற்காக வந்தானோ அதை மறந்து அவளுடன் செல்ல ஆயத்தமானான். அதுல்யா மூலம் கதையில் என்னென்ன திருப்பங்களை பா.ராகவன் நிகழ்த்த உள்ளதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share