இதுவரை நம்மிடம் மட்டுமே முட்டாள்தனங்களும் காமெடிகளும் பண்ணிக்கொண்டிருந்த நம்மாள் கோவிந்தன் தன் பெயரை நீலநகரம் முழுதும் தெரியும்படி செய்து கொண்டான்.
யாரோ ஒரு பெண் தன்னை கணவன் என்று வெண்பலகையில் எழுதிவிட்டாள் என்பதற்காக தெருவில் இறங்கி கத்திக்கொண்டே ஓடியதால் எவ்வளவு காமெடி. அந்த நகரத்தில் இருந்த அணில்களைப் பற்றியெல்லாம் நாம் அறிந்துகொள்ள வேண்டியதாய்ப் போய்விட்டது. ஏற்கனவே இங்கே அணில்கள் பெயரால் அரசியல் நடப்பது இல்லாமல் இதுவேறு.
அதுமட்டுமில்லாமல் பொண்டாட்டியே செத்தாலும் பிணத்துடன் செல்ஃபி எடுத்து அப்லோட் செய்து விட்டு அமைதியாக இருக்கும் அந்த சமூகத்தில் இவன் செய்வதெல்லாம் பெருங்கூத்து.
இவ்வளவு களேபரங்களுக்கு நடுவில் அவன் மனைவி அங்கே அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவனது நிழல் ஷில்பாவின் அடிகை அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருக்கிறது. இவன் உண்மையிலேயே வடிகட்டிய முட்டாள்தான்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.