“சாகரிகா ரசிகர் வட்டம்” என்ற பெயரில் சமஸ்தானம் கட்டும் வேலைகளை ஆரம்பிக்க ஆயத்தமாகிறாள் சாகரிகா. கோவிந்தசாமியின் நிழலின் பெயரில் சமஸ்தானத்தின் பெயரைப் பதிவு செய்கிறாள். வேலைகள் மும்முரமாக நடக்கிறது. தன்னை துதிப்பதற்குத் தானே கட்டிக் கொண்ட சமஸ்தானம் எனபதில் சிறு சங்கடம் கொள்கிறாள் சாகரிகா.
எழுத்தாளர் நற்குணசீலனின் செயல்பாடுகளைத் தனக்கு முன் மாதிரியாக எடுத்துக் கொள்கிறாள் சாகரிகா. அவள் சமஸ்தானத்திற்கு புதிய நிர்வாகம் கிடைத்துவிட்டால், நிழலைக் கொன்று புதைக்க முடிவு செய்கிறாள்.
அப்போது தான் ஷில்பா வந்து, நிழல் விலை போய்விட்டது என்றும், நிழலின் காதல் கதையையும் விளக்கமாகச் சொல்கிறாள்.பிறகு திராவிடம் குறித்து ஷில்பாவுக்கும் சாகரிகாவுக்கும் நடக்கும் உரையாடல் சுவாரசியம். இதையெல்லாம் கேட்டப்பின் சாகரிகா நிழலைப் பார்க்க நினைக்கிறாள். வெண்பலகையில் நிழல் ஏதாவது உளறிக் கொட்டும், அதைப் பின் தொடர்ந்து கண்டுப்பிடித்து விடலாமென இருவரும் கிளம்புகின்றனர்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.