ஒரு சங்கியாக இருப்பது எவ்வளவு கடினமென்று நம்மில் பெரும்பாலானோர் நேரில் பார்த்திருப்போம். அதுவும் தமிழ்நாட்டில் சங்கியாக இருப்பது மிகவும் கடினம்.
காவிச் சங்கி, வெள்ளை சங்கி, பச்சை சங்கி, நீலச் சங்கி, கருப்பு சங்கி வகைகளில் காவிச் சங்கியாய் கோவிந்தசாமி சிறப்பாக பொருந்துகிறான்.
அப்படியோர் காவிச்சங்கியாக அறியப்படுகிற கோவிந்தசாமியைப் பற்றி நாம் சூனியன் மூலமாக அறிந்திருக்கிறோம், சாகரிகா மூலமாக அறிந்திருக்கிறோம், அவனது நிழல் கூட அவனது சங்கி வாழ்வைப்பற்றி சொல்லிவிட்டது.
ஆனாலும், அவனது சங்கி வாழ்வை அவன் மூலமாகவே நாம் அறிவது மிகவும் சிறப்பல்லவா? அதுதான் இந்த அத்தியாயம்.
தனக்குள் தோன்றுகின்ற காதல் உணர்வு சரியா தவறா என போராடும் அக்மார்க் சங்கியாக அவன் இந்த அத்தியாயத்தில் வாழ்ந்திருக்கிறான். அதற்கு அவன் ராமன் முதல் கிருஷ்ணன் வரை அனைவரையும் துணைக்கழைத்திருப்பது மீச்சிறப்பு .
கரடியே காறி துப்பிய மொமண்டாக அவன் நிழலே அவன் கவிதையை காறி துப்பிய நிகழ்வு. பிரமாதம்.