‘முகக்கொட்டகை’ – நீல நகரத்தில் அதிசயங்களுக்கு அளவில்லாமல் இருக்கிறது. கோவிந்தசாமியின் எண் வெண்பலகையில் ஏற்றுக்கொள்ள படாததால், ஒரு நீல நகரவாசியிடம் தன் பிரச்சனையைச் சொல்லி முகத்தை மாற்றிக் கொள்ளும் வழியொன்றை தெரிந்துக் கொள்கிறான். நீலநகரத்தில் வாழ்ந்து இறந்துபோன மனிதர்களின் முகங்கள் அங்கே கிடைக்கும். அது தான் முகக்கொட்டகை. சட்டையைக் கழற்றி மாற்றுவது போல எந்த முகத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். அவனும் நான்கு முகங்களை தேர்வு செய்து கொள்கிறான். நான்கு முகங்கள் எதற்கு?
“தொண்ணூறுகளில் பிறந்து எழுபதுகளில் இறந்தவர். அவதூறு இலக்கிய அவதூதர்” – யாரென்று தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள்.
கோவிந்தசாமி சற்று யோசித்து செயல்ப்படுவது போல தெரிகிறது. இந்த அத்தியாயத்தில் வரும் உரையாடல்கள் ரசிக்கும்படியாக அமைத்துள்ளது.
இப்போது கோவிந்தசாமி வேறு முகத்தை மாட்டிக்கொண்டதால் வெண்பலகையில் எழுத துவங்கலாம்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!