கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 9)

விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் ஒரு செயலை அவர்கள் செயவதுண்டு. அதாவது, தங்கள் தொலைக்காட்சியின் மற்றொரு சீரியலையோ அல்லது நிகழ்ச்சியையோ அவர்களே கிண்டலடித்துக் கொளவது. ஏனோ நமக்கு அது அத்தனை சுவாரசியமாய் தோன்றும். இந்த அத்தியாயத்திலும் பா.ரா. அதே பாணியையேக் கையாள்கிறார். இதில் கடைசியாக ஒரு கேள்வி வேறு. சூனியன் குறிப்பிடும் அந்த பா.ரா. வும் எழுத்தாளர் பா.ரா.வும் ஒருவரேவா என. சந்தேகமென்ன. நானெல்லாம் இந்த அத்தியாயம் வரை சூனியனே பா.ரா. என்று தான் நினைத்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
சைக்கிள் கேப்பில் நம்ம அண்ணாத்தவையும் வச்சி செஞ்சிட்டார். தமிழ்க் குடிமகன்…. யார் அவர்? அப்படியொரு நிஜ மனிதன் இருக்கிறாரா? இணையத்தில் தேடிப் பார்க்க வேண்டும்.
இறுதியில் அந்த க்ரேப் வாட்டர் சீனில் குலுங்கி குலுங்கி சிரித்து கண்ணில் நீர் வந்தது தான் மிச்சம்.
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி