சாகரிகா சங்கப்பலகையில் எழுதுவது உள்ளிட்ட அனைத்தும் பா.ரா.வின் சூது என அறிந்து கொள்ளும் சூனியன் தன் எதிரியான பா.ரா வின் யோக்யதை குறித்து கிஞ்சித்தும் நமக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ”பூரண அயோக்கியன்” என்ற ஒற்றை வார்த்தையில் அவரின் குணாதிசதியத்தைச் சொல்லி விடுகிறான்.
கோவிந்தசாமியின் நினைவுகளை முழுமையாக அழித்தொழிக்க சாகரிகா பா.ரா.வின் உதவியை நாடுகிறாள். அவரும் அதற்கு ஒப்புக் கொள்கிறார். அவளை திராவிடத்தாரகையாக முடிசூட்டி புனைவுண்மை வழியாக மறுகட்டுமானம் செய்ய முடிவு செய்கிறார். இதையெல்லாம் அறிந்து கொள்ளும் சூனியன் பா.ரா.வுடன் நேரடியாக மோதத் தயாராகிறான். கோவிந்தசாமியை வீழ்த்தியேனும் பா.ரா.வை வெல்ல நினைக்கும் சூனியன் அந்த முடிவோடு சாகரிகா வீட்டில் இருந்து வெளியேறுகிறான். அவனின் அடுத்த மூவ் எப்படி இருக்கப்போகிறது? என்பதை அறிய ஆவல் மிகுகிறது.
சாகரிகா பா.ரா.வை மனமகிழ் முகாம் பெயரில் நீலநகரத்திற்கு அழைத்து வந்ததைச் சொல்லும் சாக்கில் கலாச்சார அமைப்புகள் கலைஞர்களை தங்கள் நாட்டிற்கு வரவழைத்து அங்கு அவர்களுக்கு அளிக்கும் அத்தனை போஷாக்குகளையும் சொல்லும் பா.ரா. தமிழ்தேசியத்தின் அடிப்படைத் தகுதி ஒற்றுப்பிழையோடு எழுதுவது, கம்யூனிஸ அவுட்டேட், திராவிடம் என்பது சித்தாந்தமல்ல; உணர்வு என்று அவைகள் சார்ந்த இன்றைய அடையாளங்களையும்(!) ஒரு பிடி பிடிக்கிறார்.
சூனியன் VS பா.ரா. டெஸ்ட் மேட்சாகத்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது. ஆனால், அதிலும் சில ஒன்டே ஷாட்களையும், திருப்பங்களையும் எதிர்பார்க்கலாம்.