கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 19)

கோவிந்தசாமியின் தலைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது வருத்தத்திற்கு உரியதே. ஆனால், இது சூனியனுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதே. ‘அரிய இலையைத் தின்று விட்டால், அறிவார்ந்த கோவிந்தசாமியாக மாறி விட்டால்’ என்று சூனியன் எண்ணுகிறான். ஆனால், மாற வாய்ப்பு இல்லை என்று முடிவுக்கும் வருகிறான்.
கோவிந்தசாமியைத் தூண்டிலாகப் பயன்படுத்திப் பாராவை வீழ்த்தி விடத் துடிக்கிறான் சூனியன். அதனால்தான் கோவிந்தசாமி வெறுத்த பின்பும் அவனைச் சூனியன் தேடித் சென்று மண்ணுக்குள் செல்லும் மழைத்துளியைப் போல அவனுக்குள் இறங்கித் தன் ஆட்டத்தைத் தொடங்குகிறான்.
அவன் நினைத்ததைச் செயல்படுத்த ‘செம்மொழிப்ரியா’ எனும் மாற்றுரு கொண்டு பலகை வழியே தன் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அரங்கேற்றி, மக்களின் பார்வைக்கும் உரையாடலுக்கும் விருந்தாக்குகிறான்.
அந்த விருந்தில் பங்கு கொண்டவர்கள் சாகரிகாவைச் சொற்பதார்த்தமாக மாற்றிக் கொண்டார்கள். நீலநகரத்தில் பெய்யும் மழையைவிட செம்மொழிப்ரியாவின் சொல் அவனைக் குளிரச் செய்கிறது. பாராவுக்கும் சூனியனுக்குமான போர் இனிதே தொடங்கியுள்ளது.
Share
By Para

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me