தமிழ் பேப்பர்

நண்பர்களுக்கு வணக்கம்.

வருகிற சனிக்கிழமை, அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி தினம் முதல் தமிழ் பேப்பர் என்னும் இணைய இதழைத் தொடங்குகிறேன். இது எங்களுடைய New Horizon Mediaவின் மற்றொரு மின்வெளி முயற்சி. இணைய எழுத்து – அச்சுப் பத்திரிகை எழுத்து இரண்டுக்குமான இடைவெளியை மேலும் சற்றுக் குறைக்க எங்களால் ஆன எளிய முயற்சி.

இது தினசரியா, வார இதழா, மாதம் இருமுறையா, மாதம் ஒருமுறையா என்கிற கேள்விகளுக்கு இடமில்லை. ‘பீரியாடிஸிடி’ என்னும் பத்திரிகை உலக ஒழுக்கத்தை நிராகரிப்பதுதான் இணைய ஒழுக்கம். நிகழும் கணத்தில் வாழும் கலைக்குப் பழகிவிட்டோம். தமிழ் பேப்பரும் அப்படியே. இதன் ட்விட்டர் பக்கத்தை நீங்கள் பின் தொடர்வதன்மூலம் எதையும் தவறவிடாதிருக்க இயலும்.

அது சரி, எதற்கு இது?

மிகத் தீவிரமாக, முகத்தை உர்ர்ரென்று வைத்துக்கொண்டுதான் வாசிக்கவேண்டும் என்று ஒரு தரப்பும், தீவிரத்துக்கு வாழ்வில் சற்றும் இடமில்லை என்ற பிரகடனத்துடன் முழு மொக்கை விருந்தளிக்கும் மறு தரப்பும், எழுத்து என்னும் கலை தொடங்கிய நாளாக என்றுமுள்ளது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட தளம் ஒன்று உண்டு. நல்ல எழுத்து. முக்கியமான எழுத்து. கவனிக்கப்படவேண்டிய எழுத்து. அதுவே படிக்க சுவாரசியமாகவும் ஏன் இருக்கக்கூடாது? நகைச்சுவைக்கும் கேளிக்கைக்கும் கொண்டாட்டங்களுக்கும் குதூகலங்களுக்கும் இடமில்லா வாழ்க்கையில் ரசமில்லை. அதே சமயம் அது மட்டுமே வாழ்க்கையுமில்லை.

எழுத்தென்பது வாழ்க்கையைப் பிரதிபலிப்பது. தமிழ் பேப்பர் அதைச் செய்யப்போகிறது.

வரலாறு, இலக்கியம், அனுபவங்கள், திரைப்படம், செய்திகள், சிந்தனைகள், கதைகள், கவிதைகள், நகைச்சுவை, ஆன்மிகம் அனைத்தும் தமிழ் பேப்பரில் உண்டு. அனைத்தும் தரமானதொரு வாசிப்பு அனுபவம் தரக்கூடியவையாக மட்டுமே இருக்கும். வாசகர்களும் எழுத்தாளர்களும் நெருங்கி உறவாடும் தளமாக இது அமையும். உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள். அபிப்பிராயங்களை, விமரிசனங்களைத் தயங்காமல் முன்வையுங்கள். மாற்றமென்பதும் வளர்ச்சியென்பதும் இரு கட்சிக்கும் பொதுவானவையே அல்லவா?

இன்னும் இரு தினங்கள். சனிக்கிழமை தமிழ் பேப்பர் பிறக்கிறது. வாசிக்க வாருங்கள்.

Share

29 comments

 • தமிழ் பேப்பர் யப்படி தமிழ் படம் போல எல்லாரையும் கலாய்பபீங்களா
  கலக்குங்க தல!

 • அண்ணாச்சி வெப்சைட்ல நல்ல கவர்ச்சி படம் போடுவீயளா?

 • நல்லா இருப்பவர்களை எல்லாம் இப்படி அறிவிக்கிராங்களே! நேற்று ஒரு இசைஅமைப்பாளர்!இன்று இவர்!!

 • இது…..இது….இதைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்திக்கிட்டு இருந்தேன்!!!! வாங்க !!!!வாங்க!!! நல்ல பல விஷயங்களை தாங்க!

 • எனக்கு கோயிஞ்சாமிகளின் சிந்தனை ஓட்டம் பிடிச்சிருக்கு! அவர்கள் அல்லவா உண்மைத்தமிழர்கள்!!

 • //அண்ணாச்சி வெப்சைட்ல நல்ல கவர்ச்சி படம் போடுவீயளா?///

  கவர்ச்சி படத்துல என்னப்பா நல்லது கெட்டது 🙂

  இருந்தாலும் ”அனைத்தும்” சொல்லியிருக்கிறதை வைச்சு நாமளா ஒரு முடிவுக்கு வர்லாம் – உண்டு 🙂

 • தமிழில் இத்தகு முயற்சி வர்வேற்கத்தக்கது.. குறிப்பாக இணைய செய்தி நிறுவனங்கள் .. உதா. லங்காஸ்ரீயின் தொழில்னுட்பத் தளம், தமிழ் சி.என்.என் அப்பட்டமாக வலைப்பதிவர்களின் பதிவுகளைத் திருடி தமது தளத்தில் இட்டு வருகின்றனர். அதில் பதிவர்களின் பெயரோ.. பின்னூட்டமோ இல்லை.. தமிழ் பேப்பர் அப்படி யெல்லாம் இருக்காது என்று நம்புகிறேன்…. தமது முயற்சிக்கு வாழ்த்துக்கள்….

 • நல்ல செய்தி…மகிழ்ச்சியோடும ஆவலோடும காத்திருக்கிறேன் சனிக்கிழமைக்காக.

 • கிழக்கில் இருந்து வெளிவரும் எந்தப் படைப்பும் தரமுள்ளதாக இருக்கும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு. மற்றவர்களைப் போல நானும் ஆவலோடு காத்திருக்கிறேன் தமிழ்ப் பேப்பருக்கு ! அன்பு வாழ்த்துக்கள்.

 • வாழ்த்துக்கள். சிறந்த முயற்சி….ஹரிஹரன்

 • தொடக்கமே தமன்னா படத்தோட நல்லா கலக்கலா இருக்கு..அந்த மாதிரியே பேப்பரும் இருக்குமா?

  அப்பாலிக்கா,சைட்டை பே சைட்டா மாத்துவீங்களா?

 • Hi Sir,

  I would like you to tell a suggestion. Tamilpaper site has a sharing button. That sharing button is from addtoany dot com. Instead of that button place tell a friend sharing button for sharing in tamilpaper website. நான் முன்பு என் பிளாகில் அதனை யூஸ் செய்திருக்கிறேன். அருமையாக இருக்கும். addthis, sharethis, add to any போன்ற sharing buttonகள் அனைத்தையும் நான் ஒருமுறை பரிசோத்தித்தேன். அவற்றில் tell a friend buttonஏ மிகச் சிறந்தது. காரணங்கள் அதிகம். டைப் செய்ய முடியவில்லை. so go to d following link and place tell a friend button 4 tamilpaper essays.

  http://tellafriend.socialtwist.com/products/taf-for-free

 • வாழ்த்துக்கள் . தமிழ் பேப்பர் மிகப்பெரிய வெற்றி அடையும். அடைய வேண்டும்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி