தவற விடுவது தவறு

தொடங்கி ஒரு மாதத்துக்குள் தீபாவளி வந்துவிட்டதால் தமிழ் பேப்பருக்கு இது தலை தீபாவளி.

நாளை தமிழ் பேப்பர் தீபாவளிச் சிறப்பிதழாக வெளிவருகிறது.

* தன்மீது வைக்கப்படும் கடுமையான விமரிசனங்களுக்கும் பொறுமையாக பதில் சொல்கிறார் ஜெயமோகன் – விரிவான பேட்டி.

* ஆழி பெரிது என்று ஒரு தொடர் ஆரம்பிக்கிறார் அரவிந்தன் நீலகண்டன். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தலைமுறையின் உலகுக்கு வாசகர்களை விரல் பிடித்து அழைத்துச் செல்கிறார்.

* அரவிந்தனுக்கு ஒரு ‘துணை’ வேண்டாமா? கார்ல் மார்க்ஸின் தோழர் ப்ரட்ரிக் எங்கெல்ஸின் வாழ்க்கை வரலாறைத் தொடராக எழுதுகிறார் மருதன்.

* அ. முத்துலிங்கத்தின் சிறப்புக்கட்டுரை உங்கள் ரசனைக்கு ஒரு விருந்து.

* யுவன் சந்திரசேகர் இம்மலருக்காக ஒரு சிறப்புச் சிறுகதை அளித்திருக்கிறார்.

* தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் கவிதை கிவிதை கலாட்டா இடம்பெறுகிறது.

* தமது விமரிசனக் கட்டுரைகளின்மூலமும் சர்ச்சைகள் மூலமும் மட்டுமே வாசகர்களுக்குப் பெரிதும் அறிமுகமானவரான ரோசா வசந்த், முதல் முறையாகத் தன்னைப் பற்றி மனம் திறந்து பேசுகிறார், சிறப்புப் பேட்டியில்.

* தீபாவளி ரிலீஸ் படங்களைப் பற்றி சங்கர் நாராயண் ஒரு முன்னோட்டம் வழங்குகிறார்.

* என்னுடைய சிறுகதை ஒன்றும் இடம்பெறுகிறது.

நாளைய தமிழ் பேப்பரைத் தவறவிடாதீர்கள். அனைவருக்கும் மனமார்ந்த தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

Share

6 comments

 • சகோ
  தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
  இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.

  நமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

  வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  ரஜின்

 • த.பேரை நாளை படித்தால் என்ன, நாலு வாரம் கழித்து படித்தால் என்ன, அடுத்த ஆண்டு தீபாவளியின் போது படித்தால் என்ன. சுடசுடச்செய்திகளை உடனடியாக தெரிந்து கொள்வதில் ஒரு பயன் இருக்கிறது.தபே போன்றவற்றை பற்றி அப்படிச் சொல்ல முடியாது.
  TP is neither Outlook or Tehelka, nor is something similar to Economist or Newyorker.I wont miss an issue of both and the same is true of Science or Nature. I can rely on them and can cite them without hesistation.Is there any tamil publication about which I can say the same, I dont think so. Tell me what is hot in you tamilpaper.Nothing, so what difference it makes whether i read it tomorrow or much much later.In any case there are enough biographies about engels and maruthan’s writing cannot be better than them unless he has travelled in Europe, dug up something unique from archives or has had access to material unread before.As that is not the case I may as well skip it.
  ‘தீபாவளி ரிலீஸ் படங்களைப் பற்றி சங்கர் நாராயண் ஒரு முன்னோட்டம் வழங்குகிறார்’
  Atleast a dozen bloggers will be writing on them, so there is anything unique in this.
  Mr.Pa.Ra What is USP in TP.I dont see anything as USP in TP.TP is yet another ezine.It is asap. You are publishing digital versions of கையெழுத்துப் பத்திரிகைகள்.This comment may sound like hitting below the belt but there is an element of truth in this.

 • 24 x 7 வாசகரை யாரும் வருந்தி அழைக்கவில்லை. அவருக்கு எந்த sensational newspaper பிடிக்கிறதோ அதை தாராளமாக படித்துக் கொள்ளட்டும். என்னைப்போன்ற பலா் காலை காபியை தமிழ் பேப்பா் படித்துக் கொண்டேதான் குடிக்கிறோம். தமிழ் இலக்கணம் முதல் அரசியல் வரை எல்லா நிகழ்ச்சிகைளையும் சுவை பட தருவது தமிழ் பேப்பா் மட்டுமே. அதைப் புரிந்து கொள்ள குறைந்தபட்ச அறிவு வேண்டும்.

 • Its so hard to digest that you are the editor of a paper/magazine/ezine where aravindan’s “erudite” articles are published. As a para fan, i hang my head out of shame.
  Please rename the paper as “tamil saamna”. That wud do justice for the content.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter