அனுபவம்

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 6)

நீலநகரத்தின் அமைப்பைப் பற்றிக் கூறும் பொழுது எனக்குப் பள்ளிக்கூடத்தில் படித்த வரலாற்று இடங்கள், அதன் கட்டட அமைப்புகள் ஆகியன நினைவுக்கு வந்தன. ஒன்றுடன் ஒன்றை இணைத்துப் பார்ப்பது மனித .இயல்புதானே!. அதைத்தான் நானும் இந்த அத்தியாயத்தில் நானு செய்தேன். என்னைப் போலத்தான் சூனியன் அவனுடைய இருப்பிடத்தையும் நீலநகரத்தின் இருப்பிடத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறான். தன் இருப்பிடத்தைப் பற்றிப் பெருமிதம் அவனது பேச்சில் மிளிர்கிறது.
‘நிழல்’ என்பது, நம்முடைய அகஎண்ணம்தானே. அது நம்மைவிடப் புத்திசாலித்தனமாகவா சிந்திக்கும்?. அதுவும் அப்படித்தானே இருக்கும். அது போல் கோவிந்தசாமியின் நிழலும் அவனைப் போலவே குறைவில்லாமல் சிந்திப்பதைக் கண்ட சூனியன் கோவிந்தசாமியின் நிழலால்கூட எளிய வினாவையும் எதிர்கொள்ள முடிவதில்லை என்று எண்ணுகிறான். இதற்குக் காரணம் சாகரிகாவைப் பற்றி அவனிடம் விசாரித்ததே ஆகும்.
மனிதன் தன் அறிவாற்றலை உணர்ந்தபோது தன் உடல் உறுப்புகளை மறைக்க ஆரம்பித்தான். இது ஆதிகாலம் முதலே தொடர்ந்து வருகிறது. இதற்குக் காரணம் என்னவெனில் உடலை இச்சைக் கொண்டு பார்க்க ஆரம்பித்ததே ஆகும். ஆனால், நீலநகரத்தில் குறிகளை இச்சையாகப் பார்க்காத காரணத்தில்தான் அனைவரும் பார்க்குமாறு குறிகள் வெளியேவும் தென்படுவது போல் அமைத்து விடுகிறார்கள் என்பது எழுத்தாளர் பா. ராகவனின் வார்த்தையின் வழி நான் அறிந்தது என நான் எண்ணுகிறேன்.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி