கபடவேடதாரி – திவாகர். ஜெ மதிப்புரை (அத்தியாயம் 8)

நதியில் குளிக்கும் போது சிறுநீர் கழித்து விட்டதற்காக தையல் போடும் அளவிற்கு பாறையில் முட்டிக் கொண்ட கோமாளியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?
விளங்காத இந்தியில் “மானங்கெட்டவன்” என்று தன் தலைவன் திட்டினாலும் அதனை உணராது பாரத் மாதா கி ஜே என்று முழங்கும் தேஷ் பகதனைத் தெரியுமா உங்களுக்கு?
அது வேறு யாருமல்ல. நம் கோவிந்தசாமி தான்.
ஆங்….. இப்போது தான் நினைவிற்கு வருகிறது. தசாவதாரம் படத்தில் அதி புத்திசாலியாய் காட்டும் கதையின் மெயின் ஹீரோவின் பெயர் கோவிந்தசாமி தானே…… அப்போ சரி.. அப்போ சரி…. ஒருவேளை அதை மனதில் வைத்து இந்த சங்கி பாத்திரத்திற்கு பா.ரா. அப்பெயரைத் தேர்ந்தெடுத்திருப்பாரோ???
தங்கள் மாநாட்டிற்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள் என்று பெரிய அளவில் Build up எல்லாம் கொடுத்து கடைசியில், பாதுகாப்பிற்கு நிற்கும் போலிஸ்காரர்களை விடவும் குறைவாக கூட்டம் கூடிய தொண்டர்களை வைத்துக் கொண்டு மலருமென்று கதறிக் கொண்டிருக்கும் கட்சியினரையும் சகட்டு மேனிக்கு விலாசித் தள்ளுகிறார். அதனாலேயே கபடவேடதாரியை வாசிப்பதில் பெரிய ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது.
சரி. இருங்கள். கோவிந்தசாமியிடம் மனித தோற்றத்திலேயே இருந்த அப்பெண் அடுத்தென்ன கூறுகிறாள் என படித்து விட்டு வருகிறேன்…
அதற்கு முன்…
இந்த அத்தியாயத்தின் தலைப்பை கவனித்தீர்களா? நதிக் க’றை’. எழுத்துப் பிழை இல்லாமல் எழுதுவதை வலியுறுத்தும் பா.ரா. எப்படி இப்பிழையை கவனிக்காது போனார்? என்று முதல் பார்வையில் தோன்றியதை நாவலின் நகர்வு வார்த்தையில் பிழையில்லை என்று உணர்த்திவிட்டது.
Share