ஒருநாள் கூத்து

பல்லாண்டு கால இடைவெளிக்குப் பிறகு இன்று கிரிக்கெட் மேட்ச் பார்த்தேன். ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்திய மேட்ச். இன்று முழுதும் ட்விட்டரில் எழுதிய கிரிக்கெட் குறுங்கடிகள் சிலவற்றின் தொகுப்பு இது. முழுதும் வாசிக்க இங்கே செல்லலாம். ட்விட்டர் இலக்கணப்படி கீழிருந்து மேலாகப் படித்தால் தொடர்ச்சி புரியும்.

 

 • மைதானத்தில் யாரோ ஒருவர் சிவப்புச் சட்டையுடன் திரிகிறார். வெஸ்ட் இண்டீஸ் ப்ளேயர் போலும்.
 • ஆட்டம் சூடுபிடித்திருக்கிறது என்பது ஆஃப் ஆகியிருக்கும் டிவியைத் தொட்டுப்பார்த்தாலே தெரிகிறது.
 • பார்வையாளர் கேலரியில் ஏன் எல்லோரும் சோகமாக இருக்கிறார்கள்? அதான் மைலாப்பூர் தொகுதியில் தங்கபாலு மனைவிக்கு சீட் கொடுத்துவிட்டார்களே?
 • ஒருவர் அவுட் ஆவதற்கு வருந்துவது அழகல்ல. புதியவரை வரவேற்கத் தயாராவதுதான் தமிழர் பண்பாடு.
 • அட இவர்தான் தோனியா? விளம்பரப் பட ஹீரோ அல்லவா! நிறையப் படங்களில் பார்த்திருக்கிறேன்.
 • அணியில் யுவராஜ்சிங், மகேந்திரசிங், ஹர்பஜன்சிங் என்று ஒரே சீக்கியர் ஆதிக்கம். எல்லாம் நாம் சர்தார்ஜி ஜோக்ஸ் சொல்லி மகிழ்ந்த பலன்.
 • க்ரிக்கின்போ தளத்தில் ஸ்கோர்போர்ட் நைசாகத் தானே அடிக்கடி மாறி நம்பரை ஏற்றிக் காட்டுகிறது. ஏதாவது அழுகுணி ஆட்டமாக இருக்குமோ?
 • க்ரிக்கின்போவில் not out not out என்று ஏன் போடுகிறார்கள்? now playing என்று மங்களகரமாக இருக்கலாம் அல்லவா?
 • பிரெட்லீ என்பவர் ஜெட்லீயின் சகோதரரா?
 • இந்த மேட்சைவிட இன்று சத்தியமூர்த்தி பவனில் நடந்த மேட்ச் பார்க்க நன்றாக இருந்தது. என்ன கவித்துவமாகக் கண்ணாடிகளை உடைக்கிறார்கள்!
 • டெண்டுல்கர் அவுட் ஆனதும் திராவிட் வருவார் என்று எண்ணியிருந்தேன். பெருத்த ஏமாற்றம்.
 • கோலி ஆடுகிறார் என்று சொன்னால் யார் ஆடுகிறார்கள் என்று கேட்கிறாள் மகள்.
 • இந்த பாண்டிங்குக்கு ஆசாரமே தெரியவில்லை. எப்பப்பார் உள்ளங்கையில் எச்சில் துப்பித் துப்பித் துடைக்கிறார். கருமம்.
 • பாண்டிங் பெயரிலேயே கண்டின்யுவஸ் டென்ஸ் இருக்கிறது. அவர் ஆட்டம் தொடரும் என்றே கருதுகிறேன்
 • தள்ளாத வயதில் டெண்டுல்கரைப் பந்துவீசச் சொல்வது தோனியின் சர்வாதிகாரத்தனத்தைக் காட்டுகிறது.
 • மீண்டும் அஸ்வின் பந்துவீசுகிறார். மீண்டும் வாட்சன் ஆட வருவதுதானே நியாயம்?
 • நம் ஊரில் சாதிப்பெயரைத் தம்பெயருடன் சேர்ப்பவர்கள்போல ஆசியில் நிறவெறியைப் பெயரில் காட்டுகிறார்களா? புதிய பேட்ஸ்மன் ஒயிட்.
 • இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவானது என்று @rmuthukumar சொல்கிறார். கார்த்திக்கூட தமது கட்சி குறித்து இப்படித்தான் சொல்கிறார்.
 • போலர்கள் சொதப்புகிறார்கள். ஆபீஸ் அமைதியாக இருக்கிறது. ஒரு விக்கெட் விழும் கணத்தை இதனாலேயே தவிர்க்க விரும்புகிறேன்.
 • க்ளார்க் என்பவர் ஆடவந்திருக்கிறார். ஒரு காலத்தில் இவருடைய டேபிள் எனக்கு மிகவும் உதவியிருக்கிறது.
 • யாரோ அவுட் போலிருக்கிறது. மனச்செவியில் விளம்பரச் சத்தம் விழுகிறது.
 • முனாப் வெங்கடேச பிரசாத் மாதிரி வீசுவதாக ஒருவர் சொல்கிறார். வெ.பிரசாத் என்னை மாதிரியே வீசுவார் என்பதை நினைவுகூர்கிறேன்.
 • க்ரிக்கின்போவில் பந்துக்குப் பந்து கமெண்ட்ரி எழுதுகிறார்கள். கவித்துவம்தான் இல்லை
 • இந்தியா ஆடும்போதும் படேல் பவுலிங் போட்டால் நன்றாக இருக்கும்.
 • வாட்சன் 25, ஹடின் 13, அஸ்வின் 21, ஜாகிர்கான் 16. என்ன எழ்வு ஸ்கோர் கார்ட் இது?
 • வாட்சன், ஹடினுக்கு சமமான எண்ணிக்கை ரன்னை எக்ஸ்ட்ரா என்பவரும் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது
 • இராமுருகனின் மகன் அஸ்வின் கிரிக்கெட் ப்ளேயர். அவரா இவர்? அம்பயர் பெயரும் இராமு என்றிருக்கிறது
 • ரெய்னா என்று யாரோ பக்கத்தில் கத்துகிறார்கள். மழையால் ஆட்டம் ரத்து?
 • இன்றைய மேட்சில் இந்தியா தோற்றால் நாளை முதல் ட்விட்டர் பிழைக்கும் என்று கேள்விப்படுகிறேன். நான் ட்விட்டரை நேசிக்கிறேன்.

 

Share

21 comments

 • சமகாலத்தில் இது போலவே உயர்தனித்துவமான குறுங்கடிகளை எழுதும் ஒரு வெளிநாட்டு ட்விட்டரின் நினைப்பு வருவதை தவிர்க்கமுடியவில்லை. 🙂

  • ஓ. நாவலெழுதுவதற்காக ஒசாகாவிலிருந்து பெல்கிரேடுக்குப் போயிருப்பவரைச் சொல்கிறீர்களா? அவரது சுருதி வேறு.

 • என்னது, இந்தியா-ஆஸ்திரேலியா மேட்சா? சொல்லவே இல்லை.

 • //பாண்டிங் பெயரிலேயே கண்டின்யுவஸ் டென்ஸ் இருக்கிறது. அவர் ஆட்டம் தொடரும் என்றே கருதுகிறேன்//

  Super.

 • ட்விட்டரில் உங்களின் எக்ஸ்பர்ட் ஒப்பினியன் மிகவும் ரசித்தேன். மிகக் குறிப்பிட்டுச் சொல்லனும்னா பாண்டிங்‍ பெயரிலேயே கன்டினியுயஸ் டென்ஸ் இருக்குனு சொன்னது சூப்பர்

  ஆனா அவர் பெயரில் டென்ஸ் ‍‍ முகத்திலோ ஏகப்பட்ட டென்ஷன்.. அவருடன் இணைந்த டென்ஸ் (10 டீம் மெம்பர்ஸ்) அவரளவுக்கு இல்லை அதான் தோல்வி
  பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ஆஸ்திரேலியா

  • மாயவரத்தான்: நான் பார்த்தபோது ஒருவர்தான் நடந்துகொண்டிருந்தார். கொஞ்சம் குண்டாக ஃபுல் ஸ்க்ரீன் சைஸிலும் இருந்தார்.

 • Excellent Para. hats off to you. பிரமிப்பு ஏர்ப்படுத்திய ஸ்பாண்டேனிட்டி, sense of humor . இந்த எழுத்தெல்லாம் ஒரு வரபிரசாதம். இதற்குமேல் சொல்ல எனக்கு வார்த்தை இல்லை.

 • விழுந்து விழுந்து சிரித்தேன். வலைப்பதிவில் எழுதுவதோடு டிவிட்டரிலும் கலக்குகிறீர்களா? இனி அங்கேயும் உங்களை பிந்தொடர்வேன்.

 • நல்ல பகடி. ஆமாம், உண்மையிலேயே உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்காதா? நுணுக்கமாக படித்தால் அப்படி தெரியவில்லையே? நன்றாக ரசித்துவிட்டு, ரசித்த்தை மறைத்துக்கொண்டு நக்கலடிப்பதுபோல தெரிகிறது. சரிதானே?

  • எனக்கு கிரிக்கெட் பிடிக்காமல் இல்லை. ஒரு காலத்தில் மேட்ச் பார்த்தவன் தான். பெரிய நேரம் கொல்லியாக அது உருவெடுத்தபோது வெட்டிவிட்டேன். அவ்வளவுதான். எக்காலத்திலும் வெறியனாக இருந்ததில்லை.

 • ‘ரெய்னா என்று யாரோ பக்கத்தில் கத்துகிறார்கள். மழையால் ஆட்டம் ரத்து?’
  Super Sir!!!!!

 • மாட்ச் பார்ததைவிட உங்கள் டிவீட்களை ரசித்து படித்தேன்!! ”””மீண்டும் அஸ்வின் பந்துவீசுகிறார். மீண்டும் வாட்சன் ஆட வருவதுதானே நியாயம்?”””” பா.ரா’ஸ் பஞ்ச்!!
  excellent.see you again on the commentry box on wednesdaY!!:-)

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter