எழுத்துத் துறையில் எந்த தேவதையும் யார் தலையிலும் கைவைத்து ஆசி வழங்கி, ஓரிரவில் காவியம் பாட வைக்காது. அடிப்படை ஆர்வமும் கற்கும் வேட்கையும் இடைவிடாத பயிற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம். முட்டி மோதி நான் பெற்றதைத்தான் வகுப்புகளில் என் மாணவர்களுக்குத் தருகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் வரலாம்.
பதினைந்து சதவீதம்
தீபாவளியை முன்னிட்டு ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் வெளியிட்டுள்ள அனைத்துப் புத்தகங்களுக்கும் பதினைந்து சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமீபத்திய நாவல் மிருது, பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறு உள்ளிட்ட, அச்சில் உள்ள 81 புத்தகங்களையும் பார்வையிட்டு வாங்குவதற்குக் கீழே உள்ள சுட்டியைப் பயன்படுத்துக. ஜீரோ டிகிரியில் பாராவின் புத்தகங்கள் வாசக நண்பர்களுக்கு மனமார்ந்த தீப...
எழுதும்போது செய்யவே கூடாத தவறுகள் – வகுப்பு
மேற்கண்ட தலைப்பில் ஒருநாள் சிறப்பு வகுப்பு நாளை மறுநாள் ஞாயிறன்று (அக்டோபர் 12) நடக்கும் (zoom class). ஆர்வமுள்ளோர் நாளைக்குள் இணையலாம். பழைய மாணவர்கள், புதிய மாணவர்கள் அனைவருக்கும் இது பொது. என்னுடைய வழக்கமான வகுப்புகள் நிறைய கதைகளுடன் நடக்கும். வந்தவர்களுக்கு இது தெரியும். இந்த வகுப்பு சற்று வேறு மாதிரி இருக்கும். கூடா 40 என்று ரைமிங்காகத் தலைப்பு வந்துவிட்டதே தவிர, எழுதிப் பார்க்கும்போது...
வாழ்வில் இல்லாததும் எழுத்தில் உள்ளதும்
எழுத்தில் நகைச்சுவை கூடுவதென்பது வாழ்க்கையை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதைப் பொறுத்தது. எதையும் விலகி நின்று பார்க்கப் பழகிவிட்டால் நகைச்சுவை தன்னியல்பாக வந்துவிடும். அதாவது, எழுதுபவன் தனிப்பட்ட முறையில் உணர்ச்சிவசப்படவே கூடாது. சிலருக்கு இது இயல்பாக அமையும். பழக்கத்தின் மூலமும் கொண்டு வரலாம். தரபேதம் இருக்கும் ஆனாலும் முழுப் பழுதாகாது. நகைச்சுவையை முதல் முதலில் Non Fiction இல்தான் முயற்சி...
எதற்கு இந்தப் புத்தகம்?
நீ வேறு, நான் வேறு: பலூசிஸ்தான் விடுதலைப் போராட்ட வரலாறு பாலஸ்தீனத்து முஸ்லிம்கள் வேறு, இஸ்ரேலிய யூதர்கள் வேறு. அப்படித்தான் பலூசிஸ்தானில் வசிக்கும் பலூச்சிகள் வேறு, பாகிஸ்தானில் வசிக்கும் முஸ்லிம்கள் வேறு. 1948 ஆம் ஆண்டிலிருந்து பாலஸ்தீனத்து முஸ்லிம்களுக்குச் சிக்கல் தொடங்கியது. இன்றுவரை அது தொடர்கிறது. அதே ஆண்டுதான் பலூசிஸ்தான் மக்களுக்கும் பிரச்னை ஆரம்பித்தது. இன்னும் ஓயவில்லை. அங்கே நடக்கும்...


