கிரிக்கெட்

ஒருநாள் கூத்து

பல்லாண்டு கால இடைவெளிக்குப் பிறகு இன்று கிரிக்கெட் மேட்ச் பார்த்தேன். ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்திய மேட்ச். இன்று முழுதும் ட்விட்டரில் எழுதிய கிரிக்கெட் குறுங்கடிகள் சிலவற்றின் தொகுப்பு இது. முழுதும் வாசிக்க இங்கே செல்லலாம். ட்விட்டர் இலக்கணப்படி கீழிருந்து மேலாகப் படித்தால் தொடர்ச்சி புரியும்.

ஒருநாள் கூத்து Read More »

விட்டது சனி

சனியன் பிடித்த ஐபிஎல் நேற்று ஒரு வழியாக முடிந்தது என்பதை ட்விட்டரில் கண்டுகொண்டேன். எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் தளத்துப் பாட்டி மாலை வேளைகளில் இனி பழையபடி கோயிலுக்குப் போய் விளக்கேற்றுவார். ஹெர்குலிஸ் ச.ந. கண்ணன் இறக்கிவைத்த குடும்ப பாரத்தையும் அலுவல் வீரத்தையும் மீளச் சுமப்பான். ஜெய்சங்கர் தெரு சாயிபாபா கோயில் வாசலடிப் பக்கிரி தருமம் செய்வோரை வாழ்த்த மறந்து ஸ்கோர் கேளாதிருப்பான். லலித் மோடிகளும் சசி தரூர்களுமாக நிரம்பி வழிந்த செய்தித் தாளின் சொற்குப்பைகளுக்கிடையே புதிய

விட்டது சனி Read More »