பாராவின் கபடவேடதாரி நாவல் சூனியன் அல்லது சாத்தானிடம் இருந்து தொடங்குகின்றது. பூனைக்கதையை போல ஒரு மாய எதார்த்த கதையாக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். (அல்லது இது வேறு புனைவு வகையை சார்ந்ததா என்று தெரியவில்லை)
சாத்தான்கள் என்று சொல்லப்படுகின்ற எதிர்மறை சக்திகளுக்கும் கூட தர்ம அதர்மங்கள் சட்ட திட்ட விதிகள் இருக்க முடியுமா என்ன? என்ற ஆச்சரியம் தான் முதல் அத்தியாயத்தில் எனக்கு ஏற்பட்டது. அல்லது ஒருவேளை அப்படி நியாய விதிகளை பின்பற்றுபவர்கள் மட்டும்தான் சூனியர்களா? (தொடர்ந்து வாசித்தால் ஒருவேளை வேறு புரிதலும் கிடைக்கலாம்)
அதிகாரத்தால் வஞ்சிக்கப்பட்டு, இரண்டு வருடங்களாக சிறைப்பட்டுக் கிடக்கின்ற ஒரு சூனியனுக்கு இறுதி தீர்ப்பு வழங்கப்படும் நாளை இந்த அத்தியாயம் விவரிக்கிறது. குற்றம்சாட்டப்பட்ட போதும் தான் அந்தக் குற்றத்துக்கு பொறுப்பானவன் அல்ல என்று முழுமையாக நம்பும் ஒரு சூனியன் அவன்.
மிகப்பெரிய நிலக்கடலை ஓட்டுக்குள் சிறை, அது எரிக்கப்படும் பிரம்மாண்டமான அடுப்பு, அதிலிருந்து வடிகட்டவும் வெப்பம்தான் பூமிக்கு வருகிறது, ஒளிச் சவரம் போன்ற விவரணைகள் சுவாரசியமாக இருக்கின்றன.
ஆனால் ஒளியும் இருளும் கிடையாத ஒரு சூனியன் சிறைக்குள் இருந்து வெளியில் வந்து ஒளியைப் பார்த்து ஏன் திகிலடைய வேண்டும் என்று புரியவில்லை.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.