வச்சி செஞ்சிருக்காருனு தான் சொல்லணும்…. யாரை? வேற யாரை? மனுசன விட மாட்டை ஒஸ்தியா நெனைக்குறவங்கள தான்.
கோவிந்தசாமியின் மூளைக்குள் நுழையும் சூனியன் அவன் தன் மூளையை இதுவரை அதிகம் பயன்படுத்தவேயில்லை என்று கூறுவதன் காரணம் என்னவென்று அடுத்தடுத்த பத்திகளில் புரிந்து போகிறது. ஆம் அவன் ஒரு கர சேவகராய் இருந்திருக்கிறானே.
இரண்டு செங்கல் என்ற அத்தியாயத்தின் தலைப்பு பொருத்தமானது தான். சாகரிகாவுடனான நட்பும், காதலும், திருமணமும் அண்ணாமலை படத்தின் “வெற்றி நிச்சயம்,…..” பாடலைப் போல இரண்டு நிமிடங்களில் முடிந்து விடுகிறது.
அந்த கடைசி வரி…… சாகரிகா கோவிந்தசாமியை திட்டுவது…. இரண்டே வார்த்தை…… யெப்பா… சாமி….. சிரிச்சு முடியல…..
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.