நம் வாழ்வின் தோல்வி எது, இறுதிக் கணம் எதுவென்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அதிகாரமிக்கவன் அதனை முடிவு செய்திருந்தாலும் பிழைத்திருக்கும் கடைசி நொடி வரை வாழ்தலுக்கான முயற்சியை கைவிடலாகாது என்பதை உணர்த்தும் அத்தியாயமிது.
“வெளியே வலை வீசி இரண்டு மின்னல்களை பிடித்து எடுத்து வந்து நகராதவாறு பிணைத்தார்கள்” – எப்பேர்ப்பட்ட புனைவு. நாம் காணும் (நேரடியாக காணக்கூடாத) மின்னலை கயிரென யோசிப்பதெல்லாம் வேற லெவல்.
சூனியன் வந்து விழுந்த அந்த நீல நகரம் பூமி தானோ? ஆனால் அது கோளோ, துணைக்கோளோ அல்ல என்று கூறினார்களே…. பார்ப்போம்…..