சென்னை புத்தகக் காட்சி 2022, கோவிட் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அநேகமாக மார்ச் மாதத்துக்குப் பிறகு அது நடக்கலாம் என்று இப்போதைக்குச் சொல்கிறார்கள். என்ன ஆகும் என்று கணிப்பதற்கில்லை.
புத்தகக் காட்சி என்பது என்னைப் பொறுத்தவரை வாசகர்களையும் நண்பர்களையும் சந்திப்பதற்கான திருவிழா. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நான் என் கூட்டை விட்டு வெளியே வருகிறேன். பிற இலக்கியக் கூட்டங்களுக்கோ, புத்தக வெளியீட்டு நிகழ்வுகளுக்கோ செல்வதில்லை. இந்தப் பத்துப் பன்னிரண்டு நாள்களில், புத்தகக் காட்சியில் சேமித்துக்கொள்ளும் உற்சாகத்தைக் கொண்டுதான் ஆண்டு முழுதும் வேலை செய்கிறேன். எனவே, தனிப்பட்ட முறையிலும் இந்த ஒத்தி வைப்பு எனக்கு வருத்தம்தான்.
சரி பரவாயில்லை. வாசக நண்பர்களைச் சந்திக்கத்தான் முடியவில்லை என்றாலும் அவர்கள் விருப்பத்துக்கு இணங்க, புத்தகங்களில் கையொப்பம் இட்டு அனுப்பலாம் என்று தோன்றியது. நாளை ஜீரோ டிகிரி பதிப்பு அலுவலகத்தில் இருப்பேன். இன்றும் நாளையும் ஆன்லைனில் என்னுடைய புத்தகங்களை ஆர்டர் செய்பவர்கள் விரும்பினால், புத்தகத்தில் கையொப்பமிட்டு அனுப்பி வைக்கப்படும்.
புத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய இங்கு செல்லவும்.
இதுவரை ஜீரோ டிகிரியின் எழுத்து பிரசுரம் வெளியிட்டுள்ள என்னுடைய 55 புத்தகங்களின் பட்டியல் இங்கு உள்ளது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.