குளிரை வெறுக்கும் வெயிலை ரசிக்கும் வெப்பத்தில் மட்டுமே வாழும் இடத்தைச் சேர்ந்தவனான சூனியனை தண்டனைக்காக சனி கிரகத்துக்கு அழைத்துச் செல்லும் போது அந்த உடலெல்லாம் நகம் கொண்ட அருவருப்பான பிசாசுகளோடு நமது பயணம் தொடர்கிறது.
ஒரு 3D திரைப்படம் பார்ப்பதை போல் உணர்வெழுகிறது. பனிக்கத்தி சூனியனின் உடலில் இறங்கும்போது நம் முதுகில் ஓட்டை விழுவது போன்றதொரு பிரமை.
“பேசுவதற்கு முன்னால் சிறிது சிந்தித்துவிட்டு பேசு” என்ற காவலனின் கூற்று சூனியனுக்கானது மட்டுமல்ல.
இன்னும் சூனியன் தப்பிக்கவில்லை. பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில், தானே தப்பிக்கிறானா அல்லது மிதந்து வரும் நீல நகரத்தின் மீது மீகாமன் சூனியனை தூக்கி எறிகிறானாவென.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.