முதல் பத்தியைப் படிக்கையில் பழக்கதோசத்தில், தவறுதலாக ஏதேனும் கணித பேரறிஞர்கள் எழுதிய மகா கணித சூத்திர புத்தகத்தை கையில் எடுத்து விட்டோமோவென்று குழம்பிவிட்டேன். சூனியம், பூரணம் என்றெல்லாம் வார்த்தைகள் வரவும். பின் நிறுத்தி ஒவ்வொரு வார்த்தையாய் மீண்டும் இரண்டாம் முறை வாசித்தபின் தான் வார்த்தைகளின் அர்த்தம் விளங்கத் தொடங்கியது.
அடுத்தடுத்த பத்திகளில் சூனியன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது நான் அவனாகவே மாறியது போன்றதொரு உணர்வு.
நியாயக் கோமானாக வீற்றுக்கும் யூதாசிடம் சூனியன் கேட்கும் கேள்வி நியாயமென்றே தோன்றுகிறது. அண்ணாவின் நீதிதேவன் மயக்கத்தில் வருவதுபோல் யூதாஸ் மயக்கமடைந்து விடுவாரோவென நினைத்தேன். ஆனால், நம் ஒன்றிய அரசாங்கத்தின் தலைவர் போல் நியாயமான கேள்விகள் காதில்விழா நாயகனாய் தன்னை நிலைனிறுத்திக் கொண்டார்.
பார்ப்போம். அடுத்த அத்தியாயத்தில் சூனியன் தப்பிக்கிரானாவென…..