ஒவ்வொரு அத்தியாயத்திலும் அன்றாட அரசியலின் பிம்பங்களை பார்க்க முடிகிறது. ஒரு இக்கட்டான சூழலில், அதிகார மயக்கத்தில் இருக்கும் நியாயாதிபதிகளிடம் பிரச்சனையை புரிய வைப்பதே கஷ்டமாகி விடுகிறது. நேரம் அதிகமில்லாததால், நம் சூனியனின் தீர்வை அனைவரும் ஆமோதிக்கின்றனர்.
“யோசனை தூரம்” – இந்த புனைவுச் சொற்கள் என்னை வெகுவாய் கவர்ந்தது. (எப்படியெல்லாம் யோசிக்கிறார்!!)
நீ என்ன தவறு செய்தாய் என்று நியாயாதிபதிகள் கேட்க, நான் சூனியனாய் பிறந்தது தான் நான் செய்த தவறு என்று பதில் சொல்கிறான் நம் சூனியன். அவன் என்ன தவறு செய்தான் என இது வரை தெரியாத போதும்,தவறுக்கு பிறப்பை காரணம் காட்டும் வழக்கம் சூனியனின் கிரகத்திலும் இருப்பது வருத்தமாக இருக்கிறது.
நம் சூனிய உலகில் பூகம்பச் சங்கு என்ற ஒன்றை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் எழுத்தாளர். கற்பனைச் சிறகுகளை விரித்து, பறக்க வைத்து கொண்டே அரசியல் பேசும் வித்தையெல்லாம் அபாரம்.
பூகம்பச் சங்குடன் கட்டப்பட்டு தூக்கி எறியப்பட்ட நம் சூனியன், விடுதலை பெருமூச்சை தனக்கு சொந்தமாக்கி கொண்டு தண்டனையிலிருந்து தப்பித்து விடுகிறான்.
கதையில் ஓட்டத்தில் வேகம் கூடிக் கொண்டே இருக்கிறது. துளி கூட சுவாரசியம் குறையாத நகர்வு வாசிக்கப்பவர்களின் கவனத்தை சிதற விடாமல் சேர்த்து பிடித்து வைத்துக் கொள்கிறது.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.