புத்தகக் கண்காட்சியின் தொடக்க நாளான இன்று, யதி வெளியிடப்பட்டது. நண்பர் எஸ்.ரா. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பினாக்கிள் புக்ஸின் முதன்மை நிர்வாகி ஆர்விஎஸ்ஸிடம் இருந்து முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார். எனக்காக வருகை தந்த எழுத்தாளர்கள் லஷ்மி சரவணகுமார், வாசு முருகவேல், காஞ்சி ரகுராம், நண்பர்கள் ஆர். பார்த்தசாரதி, ஹரன் பிரசன்னா, சேகர், கணேஷ் வெங்கடரமணன், பால கணேஷ், கவிஞர் உமா சக்தி மற்றும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
ஒய்யெம்சியே போகிற வழியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த சமயம்தான் சுருதி டிவி கபிலனை மெசஞ்சரில் அழைத்தேன். எனக்கு முன்னால் பினாக்கிள் ஸ்டாலில் அவர் நின்றிருந்தார். இன்றைய நிகழ்ச்சியை அவரது கவரேஜ் உடனடியாக உலகுக்குக் கொண்டு சேர்த்தது. கபிலனுக்கு என் தீராத அன்பு.
கிழக்கு ஸ்டாலில் மாலுமி வந்திருந்தது. முழுக்கப் புரட்டிப் பார்க்க நேரமில்லை. நாளை மாலுமி தினம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.