யூமா வாசுகிக்கு வாழ்த்து

இவ்வாண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடமி விருது யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான படைப்பாளி, பொருத்தமான தேர்வு. யூமா வாசுகிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

மலையாளத்தில் மிகப் பிரபலமான நாவல்களுள் ஒன்று ஓ.வி. விஜயனின் கசாக்கின் இதிகாசம். யூமா இதைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். சற்றும் நெருடாத, பிழைகளில்லாத, தேர்ந்த ஆக்கம் அது.

யூமா எப்போது மொழியாக்கத் துறைக்குச் சென்றார் என்று எனக்குத் தெரியாது. அவரது நாவல், ரத்த உறவு வெளிவந்தபோது அதை வாசித்துவிட்டுப் பலரிடம் அதைக் குறித்துப் பேசிக்கொண்டே இருந்தது நினைவிருக்கிறது. அவர் கவிதை எழுதுவார் [நான் வாசித்ததில்லை], ஓவியங்களும் வரைவார் [மாரிமுத்து என்ற பெயரில்] என்பதெல்லாமே எனக்கு அதன்பிறகுதான் தெரியும். மனத்தைத் தொடும் பல சிறுகதைகளும் எழுதியவர்.

பொருத்தமான நபர்களுக்கு வழங்கப்படும் இம்மாதிரியான அங்கீகாரங்களே அரசியல்களை மீறி விருதுகளின்மீது சிறு நம்பிக்கையைத் தக்கவைக்கின்றன.

யூமா வாசுகிக்கு என் வாழ்த்து.

Share