அனுபவம்

கபடவேடதாரி – தர்ஷனா கார்த்திகேயன் மதிப்புரை (அத்தியாயம் 15)

ஆக சூனியன் என்கின்ற உருவகம் மனித மூளையின் சிந்தனைப் பகுதியுடன் தொடர்புடையது. அப்படி அந்த சிந்தனையை தன் கட்டுக்குள் முழுவதுமாக கொண்டு வந்து விடக் கூடிய திறமை படைத்த சூனியன் ஏன் மனிதர்களின் மூளையில் இருக்கின்ற கடவுள் என்கின்ற பகுதியை மட்டும் ஒரேயடியாக அழித்து விடக்கூடாது? அதை செய்யாமல் இது என்ன தலையை சுற்றி மூக்கை தொடும் வேலை?
ஆனால் ஒட்டு மொத்த நீல நகரத்தையும் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவர அவன் போடும் திட்டத்தைப் பார்க்கையில் திகிலாகத் தான் இருக்கின்றது.
கோவிந்தசாமிக்கு பொறுமை இல்லை என்று சூனியன் சொல்வதெல்லாம் அபாண்டம். பொறுமை இல்லாத ஒருவன் இத்தனை பிரயத்தனம் எடுத்து அவளை தேடி இங்கே வருவானா? கோவிந்தசாமிக்கு சூனியன் மீது சந்தேகம் தான் உண்டாகி இருக்க வேண்டும். அவன் பொறுமை இழந்தைமைக்கு அதுதான் காரணமாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே கோவிந்தசாமி மீது பரிதாபப்படும் நான் இந்த விஷயத்தில் கோவிந்தசாமி கட்சிதான். 🤪🤣( பாவம் எல்லோரும் கை விட்டால் எப்படி?
தொடர் முடிந்த பின்னர் இந்த சூனியன் என்கின்ற உருவகத்தை ரசிப்பதற்காகவே மீண்டும் இன்னொரு முறை முதலிலிருந்து வாசிக்க வேண்டும்.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி