சிந்திக்கத் தெரிந்த நிழல், தனித்தியங்கும் நிழல் என்ற கருத்தாக்கம் சிறப்பாக உள்ளது. இனி, கோவிந்தசாமியும் கோவிந்தசாமியின் நிழலும் தனித்தனியாக இயங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
நிஜத்திலிருந்து நிழல் பெற்ற சுதந்திரத்தை நிழல் ஒருபோதும் தவறவிடாது. இது நிழலின் சுதந்திரம். கோவிந்தசாமி தன்னுடைய நிழலிலிருந்தும் தனித்துவிடப்பட்டான். இனி அவனுக்கு அவன் நிழலும் சொந்தமில்லை. நிழல் இல்லாதவன் கோவிந்தசாமி. எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவனின் கற்பனைத் திறன் ஒவ்வொரு அத்யாயத்துக்கும் ஓர் அடி உயர்ந்தபடியே இருக்கிறது.
கோவிந்தசாமிக்கும் கோவிந்தசாமியின் நிழலுக்குமான உரையாடல் பகுதி இனிமையாகவும் அருமையாகவும் உள்ளது. கோவிந்தசாமி தன் மனைவியைத் தவறவிட்ட நிகழ்வு வாசகரின் உள்ளத்துக்குச் சிறிதளவு பாரத்தை வழங்கினாலும் கோவிந்தசாமியால் செய்யமுடிந்தது அவ்வளவுதான் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
கோவிந்தசாமியால் தன்னைத் தானேகூடப் பாதுகாத்துக் கொள்ளமுடியாது. அவனால் எப்படித் தன் மனைவியைப் பாதுகாக்க இயலும்? இப்போது, அவன் நிழலும் அவனைவிட்டுப் பிரிந்துவிட்டது. இனி, என்ன? கோவிந்தசாமி தன்னந்தனியன்தானே!
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.