ஃபேஸ்புக்கில் நான் எழுதிய உண்ணாவிரதம் இருக்க சில வழிமுறைகள் கட்டுரைக்கு சதீஷ்குமார் ஶ்ரீனிவாசன் பின்வரும் மறுப்பை அங்கு பதிவு செய்திருந்தார். இதற்கு என் பதில் தனியே வெளியாகியுள்ளது.
உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுத நினைத்து, அதை ஜீயரின் உண்ணாவிரதத்தை குறித்து எழுதியது தவறு..
உண்ணாவிரதம் இருக்க உடல் தகுதி வேண்டும் என சொல்வதும், அதற்கு காந்தி தன் உடலை தயார் செய்து வைத்திருந்தார் என்ற கருத்து அபத்தமானதாகவே தோன்றுகிறது. இது உண்ணாவிரதம் காந்தியின் திட்டமிட்ட அரசியல் தந்திரம் என்பது போல் உள்ளது.. நமது முன்னோர்களில் பல ரிஷிகள்.. ஏன்.. வள்ளலார் முதலான எத்தனையோ பெரியோர்கள், பசித்திரு என்று போதித்து இருக்கிறார்கள்..
இதற்கு முதலில் ஆன்ம பலம் வேண்டுமே தவிர, உடலை தயார் செய்ய வேண்டியது இல்லை..
இது உங்களது ஆன்ம பலவீனத்தையே காட்டுகிறது..
எச்சில் முழுங்காத இசுலாமியர்கள், வாய்மூடி காற்றுக்கும் இடம் தராத சமணர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள்..
உண்ணாவிரதம் இருக்க வயது வரம்பு தேவை இல்லை. மன உறுதி போதும். இதிலிருந்து ஒன்று தெரிகிறது.. நீங்கள் பசி பொறுக்கும் பக்குவம் இல்லாதவர் என்று..
வேளைக்கு உணவின்றி தவிக்கும் எத்தனையோ சின்னஞ்சிறு பிஞ்சுகள், வேறு வழியின்றி உண்ணாநோன்பை வாழ்க்கை முறையாகவே கொண்டுள்ளார்கள்..
இவ்விஷயத்தில், ஜீயரை விமர்சித்திதது, அவசியமற்றது..
என்னை பொறுத்தவரை, அவர் தனக்கு தெரிந்த வகையில் தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். இது அவருக்கு தெரிந்த அஹிம்சா வழி..
காந்தி விரதம் இருந்த போதும், தங்களை போன்று கேலி செய்தவர்களும் அந்நாளில் இருந்தனர்.
ஏன்.. முடிந்தால், கலைஞர், ஜெ. அன்னா ஹசாரே, … ம்.ம்.ம். சேரமான் இரும்பொறை.. போன்றவர்களின் உண்ணாவிரதம் பற்றி விமர்சியுங்களேன்.. பார்ப்போம்..
போராட எத்தனையோ வழி என்று எதை சொல்கிறீர்கள்…
இதன் பொருள் என்ன..
விளக்குங்கள்..
சாகும் வரை உண்ணாவிரதம் என்று அவர் சொல்லவில்லை..
சாகும் வரை எழுதிகொண்டே இருப்பேன் என்றால்,
“ஏன் தட்டச்சு செய்ய மாட்டீர்களா?
60 வயதானால், கை நடுங்குமே ? என்றா கேட்பது…
தங்களின் விமர்சனம் இது போல்தான் உள்ளது..
தயவு செய்து இது போல், மற்றவரை விமர்சிக்கும் முன், யோசியுங்கள்..