அன்புள்ள சதீஷ் குமார், உங்களுடைய மறுப்புக்குச் சற்று விரிவாகவே பதில் சொல்ல விரும்புகிறேன். அநியாயத்துக்கு நீங்கள் காந்தி, வள்ளலார், ரிஷிகளையெல்லாம் உதவிக்கு அழைத்துவிட்டதால் எனக்கு வேறு வழியில்லாமல் போகிறது. துரதிருஷ்டவசமாக காந்தியையும் வள்ளலாரையும் ஓரளவு படித்துத் தொலைத்தவனானதால் இச்சங்கடம். அதற்குமுன் ஒரு சங்கதி. ஜீயர் சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவிக்கவில்லை என்ற தொனியில் நீங்கள்...
உண்ணாவிரதம் – ஒரு மறுப்பு
ஃபேஸ்புக்கில் நான் எழுதிய உண்ணாவிரதம் இருக்க சில வழிமுறைகள் கட்டுரைக்கு சதீஷ்குமார் ஶ்ரீனிவாசன் பின்வரும் மறுப்பை அங்கு பதிவு செய்திருந்தார். இதற்கு என் பதில் தனியே வெளியாகியுள்ளது. Sathishkumar Srinivasan பா.ரா அவர்களுக்கு… உடல் இளைக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுத நினைத்து, அதை ஜீயரின் உண்ணாவிரதத்தை குறித்து எழுதியது தவறு.. உண்ணாவிரதம் இருக்க உடல் தகுதி வேண்டும் என சொல்வதும், அதற்கு...
உண்ணாவிரதம் – சில குறிப்புகள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் இரண்டாவது முறையாக உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டார் என்று கேள்விப்பட்டேன். பாவமாக இருக்கிறது. ஐம்பது, ஐம்பத்தைந்து வயது தாண்டியவர்கள் திடீரென்று இம்மாதிரியான நடவடிக்கைகளில் இறங்குவது சரியல்ல. எதிர்ப்பைத் தெரிவிக்க, மிரட்டல் விடுக்க வேறு பல வழிகள் உள்ளன. உண்ணாவிரதம் மிகவும் சிரமமானது. அப்படியே அதை இருந்துதான் தீரவேண்டுமானால் சாகும்வரை என்று குறிப்பிடுவதை விட்டுவிட்டு...