கபடவேடதாரியில் கடைசி சில அத்தியாயங்களே இருக்கின்றன, ஆனால் இன்னும் வேடதாரி யாரென்று நமக்குத் தெரியவில்லை. ஒரு பக்கம் சூனியன், கோவிந்தசாமி, சாகரிகா இவர்களெல்லாம் அவனது கதாபாத்திரங்கள் என்று சொல்கிறான், இன்னொரு பக்கம் ஷில்பா, அவள் கதையின் கதாபாத்திரங்கள் தான் சாகரிகாவும் பாராவும் என்கிறாள். யார் சொல்வது உண்மை, யாருடைய கதை இது என்ற குழப்பமே மிஞ்சுகிறது.
இந்த அத்தியாயத்தில் சூனியன் மேல் கோபம் கொள்ளும் கோவிந்தசாமி சிறிது நேரம் புலம்புகிறான். ஆனால் சிறிய யோசனைக்குப் பின் ஏகப்பட்ட பெண்கள் தன்னை விரும்புவதாகவும் அதற்குக் காரணம் அவன் ஒரு கவிஞன் என்பதால் எனவும் நினைத்துக் கொள்கிறான். இது போதாதென்று அவன் தன்னை வாழும் மகாகவி என்று தன்னையே புகழ்ந்து கொள்கிறான். பாவம், பாரதிக்கு வந்த சோகம்.
அவன் எப்படி மற்ற பெண்களின் மனதை கொள்ளை கொண்டானோ, அதேபோல் சாகரிகாவையும் அடைவதாகக் கூறி கிளம்புகிறான். போகும் வழியில் அவனை எண்ணவோட்டங்கள் சரிகாவை சுற்றியே இருக்கின்றன. சாகரிகாவை சந்தித்து இரவு ராணி மலரைக் கொடுக்கிறான். அவள் அதை முகர்ந்து பார்த்தபின் கவிதை ஒன்றை பதிலாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறாள். வழக்கம்போல அழுகிறான்.
கவிதையில் மறுப்பு தெரிவிக்கும் அளவுக்கு யார் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தது எனக் குழம்புகிறான். ஷில்பா, அதற்கு மனுஷ்யபுத்திரன் தான் காரணம் என்றும் அவர்கள் நேசிக்கிறார்கள் என்றும் சொல்கிறாள். கோவிந்தசாமி தான் ஒரு மகாகவியாக இருந்தும் சாதா கவியிடம் தோற்றுப்போனது குறித்து மீண்டும் அழுகிறான்.
ஷில்பா, கோவிந்தசாமியிடம் அழுவதை விட்டு உருப்படியாக எதையாவது செய்யச் சொன்னதும், “அழித்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்கிறான். எதை அழிக்கப் போகிறான் யாரை அழிக்கப் போகிறான் என்று பொறுத்திருந்து பார்ப்போம்
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!