அனுபவம்

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 26)

அணில்களால் மின் தடை, இதைச் சாத்தியமாக்க ஒரே வழி, அணில்கள் நீல நகரத்தில் இருப்பதை போலப் பறந்தால் மட்டுமே முடியும். என்ன ஒரு புனைவு!
அதுல்யா, கோவிந்தசாமியை தன் கணவன் என்று வெண்பலகையில் எழுதியதற்காக இப்படியா தெருவில் இறங்கி கத்திக்கொண்டே ஓடுவது?, இந்தக் கோவிந்தசாமியை நினைத்தால் ஒரு பக்கம் கேலியாக இருந்தாலும், ஒரு பக்கம் பரிதாபமாக இருக்கிறது.
நியாயம் கோரி நகர நிர்வாகம் நோக்கிச் செல்கிறான் கோவிந்தசாமி, தனக்கு இழைக்க பட்ட எல்லா அநீதிகளையும் எடுத்துச் சொல்கிறான். தனக்கு நிழல் இல்லை என்பதை நிரூபிக்க முயன்று தோற்கிறான். எல்லாவற்றிக்கும் மேலாக இரவெல்லாம் மழையில் நின்று காலை மயங்கியும் விழுகிறான்.
கோவிந்தசாமியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதோடு இந்த அத்தியாயம் முடிகிறது!
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி