அனுபவம்

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 27)

சூனியனை இரண்டு அத்தியாயங்களாகக் காணாமல், இந்த அத்தியாயத்தில் தான் மீண்டும் பார்க்கிறோம். தனக்கு, கோவிந்தசாமி மீதும் சாகரிகாவின் மீதும் எந்தப் பகையும் இல்லையென்றும், அதுல்யா, நரகேசரி, செம்மொழிப்ரியா மூவரும் அவன் லட்சியத்தை நோக்கிய பயண கருவிகள் எனவும் நம்மிடம் கூறுகிறான்.
ஆனால் செம்மொழிப்ரியா, மூன்றாவதாக எதற்கு அதுல்யா என நம் சூரியனோடு முறையிடும்போது தான், சூனியன் அவனது பாத்திரங்களைக் கோவிந்தசாமியின் வழியாக வெளியிட்டது எவ்வளவு தவறு எனப் புரிகிறது.
மேலும் சாகரிகா ஒரு போலி திராவிடத் தாரகை என்பதால், அவளைக் கலாச்சாரத் துறைச் செயலாளராக நியமிப்பதை தடுக்க சூனியனும், செம்மொழிப்ரியாவும் முயன்று கொண்டிருக்கிறார்கள் என்று அறிகிறோம்.
புதிதாய் கோப்பெருஞ்சோழன், ஜெரினா மரிய திருவுளம் இரண்டு பாத்திரங்களை அறிமுகம் செய்கிறான் சூனியன். அவர்கள் பிறந்து வளர்ந்த வரலாறு, அவர்களுக்கும் சாகரிகாவிற்கும் இருக்கும் பகையெனக் கதை நகர்கிறது. பாவம் சாகரிகா. இதை வெண்பலகையில் படித்தால் என்ன ஆகப் போகிறாளோ, பொறுத்திருந்து பாப்போம்.
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி