அனுபவம்

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 29)

சாகரிகா, ஷில்பா மற்றும் கோவிந்தசாமியின் நிழலும் காலை உணவை முடித்து எங்கோ புறப்பட எத்தனிக்கின்றனர். சாகரிகா தான் இந்தத் திட்டத்தைக் கையாள்கிறாள். கிளம்பும் வரையில் இம்மூவரின் உரையாடல் மிகச் சுவாரசியமாக அமைந்திருக்கிறது
.
ஒரு மின் வாகனத்தில் மூவரும் நீல வனத்தை நோக்கிப் பயணிக்கின்றனர். போகும் வழியில், நீல வானத்தைப் பற்றிச் சாகரிகா சொல்லிக் கொண்டே வருகிறாள். அங்கு நிலவி வரும் சமஸ்தானங்களை பற்றியும் வாழ்த்துகளை வரியாக வசூலிப்பது குறித்தும் விவரிக்கிறாள்.
நிழலை நீல வனத்தின் பிரஜையாக்கி, ஒரு சமஸ்தானம் அமைத்து, சாகரிகாவுக்காக ஒரு படையைத் தயார் செய்வதே அவர்களின் திட்டமாக இருக்கிறது. இதைக் கேட்டு நிழல் வெகுவாய் உணர்ச்சிவசப்படுகிறது. மூவரும் இப்போது நீல வனத்தை நெருங்கி விட்டனர்.
கபடவேடதாரியோடு தொடர்ந்து பயணிப்போம்!
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி