ஒன்பதாவது அத்தியாயத்திலிருந்து இந்த நாவலின் கதைகூறும் முறையில் ஒரு மாறுதல் ஏற்பட்டுள்ளது. புகைவண்டி புதிய திசையில் செல்ல தண்டவாளத்தை மாற்றிக்கொள்வது போல இது அமைந்துள்ளது.
இதுவரை வாசித்துவந்த வாசகர்கள் சற்றுத் தயங்கி, இந்தப் புதிய கதைசொல்லியைப் பின்தொடரத் தொடங்குவார்கள். ஒருவகையில் இந்த அத்தியாயம் முழுக்க முழுக்க தன்னிலை விளக்கமாகவே அமைந்துள்ளது.
கதையின் ஓட்டம் ஆற்றொழுக்காக மாறிவிடுகிறது. வாசகருக்கு அதிபுனைவிலிருந்து அப்படியே இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியதுபோல ஓர் உணர்வு ஏற்படுகிறது.
பாண்டிச்சேரி பற்றிய விரிவான குறிப்புகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக ‘மது’, ‘மதுவருந்துநர்’ பற்றிய மாற்றுச்சிந்தனைகள் இந்த அத்தியாயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
கோவிந்தசாமி பற்றிய ஒரு முழுத்தெளிவு வாசகருக்குக் கிடைத்துவிடுகிறது. கோவிந்தசாமியின் மீது வாசகருக்குக் கரிசனமும் ஏற்பட்டுவிடுகிறது. எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள் இந்த அத்தியாயத்தின் வழியாக வாசகருடன் நேரடியாகவே உரையாடியிருக்கிறார்.