அனுபவம்

கபடவேடதாரி – முனைவர் ப. சரவணன் மதிப்புரை (அத்தியாயம் 10)

கோவிந்த சாமியின் நிழலுக்கும் சூனியனுக்குமான உணர்ச்சிகரமான உரையாடல் இந்த அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது.
‘ஒருவரைப் பற்றிப் பிறரது கருத்தே அவரின் ஆளுமையாக மற்றவரால் கருதப்படுகிறது’ என்ற கருத்தை இந்த அத்தியாயத்தில் எழுத்தாளர் உயர்திரு. பா. ராகவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடவுளுக்கும் கடவுளின் விரோதிக்குமான போராட்டம் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்து. யுகப்பிரளயம் பற்றிய செய்தியும் குறிப்புணர்த்தப் பட்டுள்ளது. சூனியன் மரணக்கப்பலில் ஏறக் காரணமான நிகழ்வினைப் பற்றிய சிறுகுறிப்பும் இடம்பெற்றுள்ளது.
வாசகருக்கு ஏற்பட்டதுபோலவே சூனியனுக்கும் கோவிந்தசாமியின் மீது இரக்கம் ஏற்பட்டுவிடுகிறது. அவனைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள விரும்புகிறான்.
ஒருவரைப் பற்றி முழுதும் அறிவது அவ்வளவு எளிதல்லவே! ஆனால், சூனியன் சாகரிகாவின் தலைக்குள்ளும் நுழைய திட்டமிடுகிறான். அது நல்லதுதானே! இரண்டு தரப்பினைப் பற்றியும் அறிந்துகொண்டால்தானே இவர்களின் சிக்கலுக்கு நல்லதொரு தீர்வினைக் காணமுடியும்!
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி