தன் இலட்சியத்திற்காக உருவாக்கும் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்களோடு, தன் நோக்கம் பற்றி அவ்வப்போது கோடி காட்டி வந்த சூனியன் இம்முறை தன்னுடைய இலக்கிற்கான திட்டமிடல் குறித்தும் தெளிவான பார்வையை நமக்குத் தந்து விடுகிறான். சூனியனின் விளக்கத்தோடு அத்தியாயம் ஆரம்பிக்கிறது. கூடவே, சாகரிகாவை பிழியாத தேனடையாய் காட்சிப் படுத்தி பிரபலமாக்கிக் காட்டுவதில் பிரயாத்தனப்படுவதாக பா.ரா. மீது வெறுப்பு கொள்கிறான். நீலநகர மக்களையும் சாடுகிறான். ஆயினும் தன் இலக்கை நோக்கிய பார்வையே அவனுக்குள் கனன்று கொண்டே இருக்கிறது.
அடுத்த இரண்டு காதாபாத்திரங்களை வடிவமைக்கத் தொடங்குகிறான். நரகேசரி, செம்மொழி ப்ரியா என இருவரும் இருக்க மூன்றாவதாய் அதுல்யாவை உருவாக்கியது குறித்து எழுப்பிய கேள்வி இப்பொழுது மூன்றிலிருந்து ஐந்தாகும் போதும் எழும் என்றே நினைக்கிறேன்.
பெரியார்தாசன், புத்தர், நக்சலைட், காசிமேடு, தம்புசெட்டித் தெரு, மத மாற்றம், இலக்கியம் என அறிந்தவர்களுக்கு மீண்டுமொரு அறிமுகம் தந்து நீண்டு சாகரிகாவின் திகிடுதத்தம், காதலா இல்லை காமமா என உணர இயலா மயக்கம், அறிமுக நட்பு தந்த விளைவு என தான் உருவாக்கப்போகும் நான்காவது, ஐந்தாவது காதாபாத்திரங்களுக்கு சொல்லப்பட்ட பிண்னனி கிறுகிறுப்பின் அபாரம். சூனியன் உருவாக்கும் கதாபத்திரங்களுக்கான பிறப்பின் சரித்திரத்தை வாசிக்கும் போதெல்லாம் அது தொட்டுச் செல்லும் தகவல்கள் அத்தகவல்களை அறிந்தவர்களுக்கு நினைவூட்டல் எனலாம். ஐந்து பாத்திரங்களின் அறிமுகம் எப்படி இருக்கும்? காத்திருப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.