சூனியன் தப்பி விட்டான் என்ற பதட்டத்தை விட, சூனியன் ஒருவர் தலையிலேறி உள்நுழைந்தது ஒரு பதட்டம். அதை விட பதட்டம் அந்த நினைவிடுக்குகளில் புதைந்திருக்கும் சேதிகள்.
அம்மனிதன் பூமியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்களை போல் ஒருவனே,.. ஆனால்….
கோவிந்தசாமி என்ற அம்மனிதன் பிறப்பில் இருந்து அவன் திருமணம் வாரை வேகமான அறிமுகத்தை காண்கையில் கதை வேறு ஏதோ ஒரு திசையில் பயணிக்கும் என தோன்றுகிறது.
சென்னையில் (என நினைக்கிறேன்) ஆரம்பித்து கோவிந்துவின் மூளையின் குழப்ப அமைப்புக்கு காரணமான தாய் தந்தை என எளிய அறிமுகம் ஆனபின் ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை விரைகிறது. கோவிந்துவிற்கு, பெண்ணித் அறிமுகம் முதல் திருமணம் வரை ஜெட் வேக அறிமுகம்.
கோவிந்தசாமி இன்னும் அடி வாங்கப்போகிறான் என்ற பதட்டத்தை விட மண்டைக்குள் மணை போட்டு அமர்ந்திருக்கும் சூனியன் என்ன செய்யப்போகிறான் என பதட்டம் கூடுகிறது..
ஆனால்.. என்று இழுத்தேனல்லவா..
கோவிந்தசாமி சூனியனை மண்டையில் சுமந்து கொண்டு கடவுச்சீட்டுடான் காத்திருக்கிறானல்லவா?
அது பூமிதானா?எனில் கடவுச்சீட்டுடன் எங்கு சென்றிருக்கிறான்? கேள்விகளுடன்…காத்திருப்போம்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.