அனுபவம்

கபடவேடதாரி – தேவேந்திரன் ராமையன் மதிப்புரை (அத்தியாயம் 2)

சூனியக்காரன், தனது மரண தண்டனை நிறைவேற்றுவதற்காக நாடு கடத்தப்படுகிறான். அவன் பயணிக்கும் அந்த கப்பலானது எலும்புக்கூடுகளால் செய்யப்பட்டது. அந்த நிலையிலும் சூனியக்காரன் மார்தட்டி சொல்கிறான் உயிர் மரித்து போனால் எஞ்சுவது எலும்பு மட்டுமே ஆனால் அதுகூட எங்களுக்கு இல்லையென்பதால் நாங்கள் கடவுளையே மிஞ்சிவிட்டோம் என்கிற கர்வத்துடன் அந்த மிதக்கும் கப்பலில் பயணிக்கிறான்.
ஆனால் அவன் எந்த தருணத்திலும் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடவில்லை ……
எனக்கு மிகவும் பிடித்துப்போனது, இந்த சூனியாகரன் கதாபாத்திரம், ஏனெனில் அவன் தனது இறுதி கட்டத்திற்கு ஊர்வலமாக செல்கிறான், மீகாமனும் மற்றும் காவலர்கள் படைசூழவும் கூடவே மற்றும் ஏராளமான மரணதண்டனை கைதிகளுடன் அந்த மிதக்கும் கப்பலில் ஊர்வலமாக செல்கிறான் தனது வாழ்வு முடியப்போகிறதென்ற மனநிலையுடன். அந்த மனநிலையிலும் அவன் எவ்வாறு நீதிமானிடம் வாதாடினானோ அதை போலவே இந்த மீகாமினுடன் வாதாடிக்கொண்டே செல்கிறான் அதன் விளைவாக பனி கத்திகள் அவனின் மீது பாய்கிறது அது அவனுக்கு சித்ரவதை என்றாலும் அவன் மனம் தளராமல் எப்படியாவது தப்பிக்க எனக்கு ஒரு வழி கிடைக்காதா என்று யோசித்துக்கொண்டே காத்திருக்கிறான்.
எலும்புகளுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பது அதுவும் சூனியக்காரன் தனது மனைவி இறந்ததற்கு புகழ்பெற்ற வீரனின் தொடை எலும்பில் கிரீடம் செய்ததாகவும் சொல்லும் போது அவர்கள் எவ்வாறு மனிதர்களின் எலும்புகளை பயன்படுத்துகிறார்கள் என்றும் அரசாங்கம் இதற்காக அங்காடி வைத்து விற்பனை செய்வதாகவும் சொல்லுவது கொஞ்சம் பிரமிப்பு கொடுக்கிறது.
கப்பலின் மேற்கூரையில் அருவருப்பான பிசாசுகளின் அணிவகுப்பு. ஆனால் அந்த பிசாசுகள் தான் அழிவுகளிருந்து இந்த கப்பலை காப்பாத்தும் என்பதற்காகவே வைத்திருக்கிறார்கள்.இருந்தாலும் அவற்றை பற்றி வரும் வருணனைகள் வாசிக்கும் போதே அதீத அருவருப்பினை தருகிறது.
எந்த ஒரு நொடியும் நமக்கு எதாவது ஒரு புதிய மார்க்கத்தினை கொடுக்கும் என்பதற்கு உதாரணமாக இந்த கதையில் நம்ம சூனியக்காரனுக்கு ஒரு வேளையில் ஒரு சிறிய வாய்ப்பு கிடைக்கிறது. அந்த கிடைத்த வாய்ப்பினை அவன் எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறானா இல்லையா என்பதை நாம் அடுத்த அதியத்தில் தான் தெரிந்து கொள்ள முடியும்.
அதுவரை நாமும் அந்த சூனியக்காரனின் மனநிலையுடன் அவன் கூடவே பயணிப்போம்
Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி