சென்ற அத்தியாயத்தில் நாயகனைக் காப்பாற்றவே அவனை மரண தண்டனைக்கு அழைத்துச் செல்லும் கப்பலைத் தகர்க்கும் வண்ணம் எங்கிருந்தோ கிளம்பியது ஒரு நீல நகரம். தோராயமாக அது பூமியைச் சேர்ந்ததாக இருக்கலாம். பூமியிலிருந்து பெயர்ந்த நகரம் தட்ப வெப்பம், கதிர்வீச்சு, ஈர்ப்புவிசை, வளிமண்டலம் அனைத்தையும் தாண்டி விண்வெளியில் எங்ஙனம் பிரவேசிக்க இயலும்? அதிலிருக்கும் மனிதர்களின் உடல் வெடித்துசிதறாமல் எப்படி இருக்க முடியும்? பெளதீக ரீதியாக இது சாத்தியமா? இரண்டாவது அத்தியாயத்தை தலைகீழாக வாசித்ததில் உண்டான சந்தேகம் இது. சரி, புனைவில் லாஜிக் பார்க்கக் கூடாது.
கப்பலுக்கு வரும் ஆபத்தைக் கூற நியாதிபதிகளை தொடர்பு கொள்கிறார்கள் கப்பலில் வரும் அதிகாரிகள். அமரர்களுக்கோர் சோம ரசம் இருக்கையில், சூனியர்களுக்கு ஒரு தாவர உருண்டையாவது இருக்கக் கூடாதா. அவற்றை மென்றபடி மயக்கத்தில் இர்ந்தார்கள் நியாதிபதிகள். இவர்கள் செல்லும் கப்பல் நம் டவுண் பஸ் அல்ல எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி நிதானமாகச் செல்ல, பாய்ண்ட்-டூ-பாய்ண்ட் / எண்ட்-டூ-எண்ட் மாதிரியான கப்பல், தன் கிரகத்திலிருந்து புறப்பட்டு நேரடியாக சனிக்கு சென்று தண்டனை பெற்றுள்ள நூற்றுக்கணக்கான கைதிகளை சனியின் குளிரில் தள்ளிக் கொன்றுவிட்டு (இத்தனை மரண தண்டனைக் கைதிகளைப் பார்க்கும்போது சூனியர்களுக்கு சூனியாபிமானமே இருக்காது என நினைக்கிறேன்) அங்கிருந்து மீண்டும் தன் கிரகத்திற்குச் சென்றுவிடும், இடையில் நோ டைவர்சன். எனவே கப்பலை எப்படியாவது இக்கோர விபத்திலிருந்து காக்க வேண்டும்.
இப்போது தான் நாயகன் தன் ஞானத்தை உபயோகிக்கிறார். அதாகப்பட்டது, தன்னை ஒரு பூகம்பச் சங்கோடு இணைத்து அந்த நகரத்தின் மீது வீசி அந்நகரை அழிக்கச் சொல்கிறார். அது என்ன பூகம்பச் சங்கு- நீருக்கடியில் ஏற்படும் பூகம்பங்களை பிசாசுகளை ஏவி எடுத்து வர வைத்து அதனை சங்குகளிள் அடைத்துவைப்பார்கள். இன்னும் புரியலையா? அட அதான் பா, பைரேட்ஸ் ஆப் தி கரேபியனில் நம்ம தலைவரில் ப்ளாக் ப்பியர்-லை சின்ன குப்பிக்குள் அடைத்து வைப்பார்களே, கிட்டத்தட்ட அப்படித் தான்.
இத்தகைய பூகம்பச் சங்கு பெரும்பாலும் போருக்காகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், கப்பலுக்கு ஒன்று பொருத்தப்பட்டிருக்கும், மேலும் அதிக சேதம் ஏற்படுத்துமாறு வீரியம் கொண்டதாய் இருக்கும் இவைகளை ஆபத்துக் காலங்களில் பயன்படுத்துவர். இப்போது நாயகன் கூறிய ஆலோசனைப்படி அவன் கழுத்தில் ஒரு பூகம்பச் சங்கினை மாலையாகக் கோர்த்து அவனை அந்த அநாமதேய நகரின் மீது எறிந்துவிடுவார்கள், சங்கு வெடிக்கும், அந்நகரம் அழியும், கப்பல் தப்பிக்கும்- இதுவே திட்டம். சரி, ஒரு சந்தேகம்… நகரம் சற்று தொலைவில் வரும் போது அது கப்பலுக்குத் தாழ்வாக இருப்பதாகவும், நாயக சூனியனை தூக்கி எறியும் போது அந்நகரம் தலைக்கு மேலாக இருப்பதாகவும் கதையில் கூறப்பட்டுள்ளதே…..!
இப்போது தான் முக்கியமான காட்சி, நாயகனைத் தூக்கி அந்நகரின் மீது எறிந்து விட்டு அண்ணாந்து பார்க்கும் தருனத்தின், அவனோ சங்கை வாயில் கடித்து வெடிக்காமல் தடுத்து அடியைத் துளைத்து மேலே சென்று விடுகிறான். அந்தப் புது நகரத்திற்கு வந்திருந்த ஒரு மனிதனின் தலையில் தன் உடலை துகளாகச் சுருக்கிக் கொண்டு குதித்தார் நம் நாயக சூனியர். What a great escape! அதனால் தான் அவன் கதாநாயகன். இன்னும் பிழைத்திருக்கிறான்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.