பரிசோதனை

சில ட்விட்டர் நண்பர்களின் ஆலோசனைப்படி விண்டோஸ் லைவ் எடிட்டரைத் தரவிறக்கம் செய்து அதில் இருந்து இத்தளத்தில் நேரடியாக எழுத முடியுமா என்று பார்க்கிறேன்.

இது ஒரு பரிசோதனைப் பதிவு. குறிப்பிட்ட விஷயம் ஏதுமில்லை. சில தினங்களாகவே நீண்ட கட்டுரைகள் எழுத நேரமில்லாமல் இருக்கிறது. செம்மொழி மாநாடு தொடர்பாகவே சில கட்டுரைகள் எழுத நினைத்தும் முடியாமல் போய்விட்டது. அவசரத் தொடர்புக்கு ட்விட்டர் போதுமானதாக இருக்கிறது.

பெரியார் ஈ.வெ.ரா. தவிரவும் இந்நாள்களில் எழுதுவதைவிட நிறையப் படிக்கிறேன். பெரியார் திராவிடர் கழகத்தினர், பெரியாரின் குடியரசுக் கட்டுரைகளை மின் நூல்களாகத் தொகுத்து இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள். மிகப்பெரிய சேவை இது. தமிழ் சமூகம் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

சும்மா படிக்கத் தொடங்கி, நிறுத்தவே முடியாத அளவுக்கு உள்ளே இழுத்துக்கொண்டோடுகிற எழுத்து. 1925ல் பெரியார் பயன்படுத்தியிருக்கும் தமிழைப் பார்க்க, அதிர்ச்சியும் வியப்பும் ஒருங்கே ஏற்படுகிறது. அந்நாளைய தமிழ் எழுத்தாளர்கள் யாருக்குமே எழுத்தில் அத்தனை எளிமை கிடையாது என்று அடித்துச் சொல்வேன். ஆத்திகராக இருந்த காலம் தொட்டு, காங்கிரஸ் தொண்டராக, காந்தி பக்தராக இருந்த நாள்தொட்டு அவர் எழுதிய கட்டுரைகளைக் கால வரிசையில் படித்துக்கொண்டிருக்கிறேன். முதல்பாகம் முடித்துவிட்டேன். இன்னும் ஒன்றிரண்டைப் படித்தபிறகு அது குறித்துச் சில கட்டுரைகள் எழுதவேண்டுமென்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

பரிசோதனைப் பதிவுக்கு 1138 வார்த்தைகள் அதிகம். எனவே இத்துடன்.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

10 comments

  • திரு. அரவிந்த நீலகண்டன்.. எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

  • இழுத்துக்கொண்டோடுகிற

    உங்கள் வலைதளத்தில் நான் வாசித்த 90 சதவிகிதத்தில் முதன் முதலாக ஆச்சரியம் ஏற்படுத்திய வார்த்தை இது. இந்த வார்த்தை சரிதானா? அல்லது பிழையா?

    நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைதளம் பொக்கிஷம் என்ற வார்த்தைக்கு மேலே ஏதாவது ஒரு வார்த்தைகள் இருக்குமானால் அதை இந்த இடத்தில் போட்டுக் கொள்ளலாம்.

    தமிழ் இனி வாழும்.

  • திரு.பாரா அவர்களே,

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உதாரணத்திற்கு 1925ஆம் ஆண்டு வெளியான கட்டுரைகள்

    48. காவேரி அணை
    56. சீனர்களின் கதை
    57. உலகம் போற்றும் மகாத்மா

    ஆகியவற்றைப் படித்தேன். தமிழ் நடை மிகச் சரளமாக உள்ளது. பெரியாரைப் பற்றி அவ்வளவு தெளிவான பிம்பம் என்னிடம் இல்லை.
    முழுவதும் படித்துவிட்டு நீங்கள் புரிந்து கொண்டதை எழுதுங்கள்.

    வாழ்த்துக்கள்

  • உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
    ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
    ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
    நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
    ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
    🙂

  • ஐயோ.. சார் இந்த ஸ்வேதா சொல்றத கேட்காதீங்க.. அவங்க jeejix websiteக்காக புள்ளை புடிக்குறாங்கனு நினைக்கேன். அவங்க இங்க போட்டிருக்கிற இந்த கமெண்ட் போஸ்ட்ட ஒவ்வொரு blogலயும் போய் அப்படியே copy, paste பண்ணுறாங்க. அந்த சைட்டு (வெப்சைட்ட சொன்னேன்..) போனா அப்படி ஒன்னும் நல்லாவும் இல்ல.. என்னை நம்புங்கோள்ள்ள்ள…

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading