அதாவது கோவிந்தசாமி என்று பெயர் கொண்ட ஒருவர் இந்தியைப் தேசம் முழுவதற்குமான ஒரே மொழியாக அறிவித்து விட வேண்டும் என்று ஆவேசப்படுவதில் இருக்கின்ற நுட்பமான அரசியல் தான் இந்த அத்தியாயத்தில் நறுக்கென்று தைத்த ஒரு விஷயம். அதிலும் தெரியாத மொழியில் அந்த தலைவர் வசைபாடுவதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல் உணர்ச்சி வசப்படுவது எல்லாம் அங்கதத்தின் உச்சம்.
உள்ளே வரும் யார் வேண்டுமானாலும் குடியுரிமை பெற்று விடலாம் என்பது நல்ல கவர்ச்சிகரமான சலுகையாக இருந்தபோதிலும் அதைத் தேர்ந்தெடுக்காதவர்கள் 15 நாட்கள் பட்டினி கிடக்க வேண்டும் என்பதெல்லாம் சற்று அதிகம்தான்.
இந்த அத்தியாயத்தின் கடைசியில் குறிப்பாக நான் கவனித்தது என்னவென்றால் அந்த வெண் பலகையில் இன்னும் ஒருவரைப் பற்றி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்பதைத் தான். மனித வாழ்வின் அபத்தத்தை, சாகரிகாவின் தோழியின் சொற்களின் வழியாகவும் கோவிந்தசாமியின் அதிர்ச்சியின் வழியாகவும் இவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறார் இருக்கிறார் பாரா. !!