ஏன் தனக்கு கோவிந்தசாமியை பிடித்துப்போனது என்பதற்கு சூனியன் சொல்லிய காரணம் மிகவும் பிடித்திருந்தது. மூடனாக இருப்பது தவறல்ல. ஆனால் அவ்வாறு இருந்துக்கொண்டு அதை உணராது செய்யும் மேட்டிமைத்தனங்களை கண்டால் யாருக்கும் எரிச்சலாக இருக்குமல்லவா. இங்கு கோவிந்தசாமி அவ்வாறு இல்லை. அவனை மூடனாகவே ஆசிரியர் கதையில் சித்தரித்திருக்கிறார். அதை அவன் உணரவும் செய்கிறான். ஆனால் மாற்றிக்கொள்வதில்லை. அவ்வளவுதான். அந்த உணர்தலை வரிகளில் அழகாக பாரா சொல்லியது பிடித்திருந்தது.
கோவிந்தசாமியின் குடும்பத்தில் தங்களின் பெயர்களில் சாமியை விடாமல் துரத்திக்கொண்டு வரும் அந்த சாமி சரித்திரம் சிரிப்பூட்டுவதாய் இருந்தது.
கோவிந்தசாமி என்னதான் மடையனாக இருந்தாலும், அவன் காதல் மேன்மையானதாக இருக்கிறது. அதிலும் மடத்தனம் தலைத்தோங்குகிறது என்பதே பரிதாபமாக இருக்கிறது. சூனியனால் கோவிந்தசாமிக்கு ஏதேனும் நல்லது நடக்குமா?? எனும் கேள்வியில் தான் முடிகிறது இந்த அத்தியாயம்.