மணிப்பூர் கலவரம்: ஒரு பார்வை – சுனிதா கணேஷ்குமார்

சமீபத்தில் மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்தைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை வாசகர்கள் புரிந்து கொள்வதற்காகப் படைக்கப்பட்ட, மணிப்பூரின் வரலாற்று படைப்பாகவே இருக்கிறது இந்த நூல்.. இனக்கலவரம் என்ற பெயரின் பின்னால் நடக்கும் அரசியலின் இருண்ட பக்கங்களை மிகத் தெளிவாக விளக்குகிறது..

மணிப்பூர் மாநிலத்தில் மலைத்தொடர்களில் வசிக்கும் பழங்குடி இனமக்கள் குக்கிகள், நாகாக்கள் மற்றும் சில பழங்குடி இனமக்கள்.. மணிப்பூரின் பள்ளத்தாக்கு சமவெளி பகுதிகளில் வசிக்கும் மெய்தி இனமக்கள்..

மணிப்பூரின் வசிக்கும் முதன்மை பழங்குடி இனத்தினவராக கருதப்படும் குக்கிகளில் பெரும்பான்மையானவர்கள் கிட்டத்தட்ட 42% கிறித்துவர்கள் மற்றும் மற்றவர்கள் மற்ற மதத்தை சார்ந்தவர்கள்.. ஆனால் ஒருவர் கூட இந்துக்கள் கிடையாது.. இவர்கள் பிரிட்டிஷார் காலத்தில் கிறிஸ்தவத்தை தழுவியவர்கள்.. இதற்கான தெளிவான வரலாற்றினை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்..

பள்ளத்தாக்கு நிலப்பரப்பில் வசிக்கும் 41.2% பேர் மெய்தி இன மக்கள் அனைவரும் இந்துக்கள், இந்துக்களாக மதம் மாற்றப்பட்டவர்கள்… அதற்கான வரலாற்றினை ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்..

மலைகளிலெயே பிறந்து அங்கேயே வாழ்ந்து மறைபவர்கள் குக்கி இனத்தவர்கள்.. அவர்கள் மணிப்பூரின் மிகப் பழமையான காலத்திலேயே எங்கேயோ இருந்து குடிபெயர்ந்து அங்கே காலம் காலமாக வாழ்பவர்கள்.. மணிப்பூரின் பூர்வக்குடிகள் என்று சொல்லப்படுகிறார்கள்..

ஆனால் குக்கி இனத்தவர்கள் மணிப்பூரில் மட்டும் இல்லாமல் மியான்மர், மணிப்பூர் – மியான்மர் எல்லைப் பகுதிகளிலும் வசிக்கிறார்கள்.. சில வடகிழக்கு மாநிலங்களிலும் வசிப்பதால் குக்கி இன மக்களை வந்தேறிகள் என்று மெய்தி இனமக்கள் கருதுகிறார்கள்.. ஆனால் இவர்கள் இருவருமே மணிப்பூர் மண்ணின் மைந்தர்கள் அல்லர் என்கிறார்…

கணிசமாக மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களாக குக்கிகள் இருக்கிறார்கள் என்பதற்கு உட்காரணமாக போதை கடத்தல் இருக்கிறது.. ஆனால் இதை மட்டுமே வைத்துக் கொண்டு மணிப்பூரில் வசிக்கும் அத்தனை குக்கிகளையும் சட்டவிரோதிகள் என்று முத்திரை குத்துவது நியாயமற்றது என்கிறார்..

மணிப்பூர் மண்ணின் இன்னொரு பூர்வக்குடிகளாக சொல்லப்படும் மெய்தி இனமக்கள்.. சனாமஹி மதத்தைச் சார்ந்த இவர்கள் எப்படி இந்துக்களாக மாறினார்கள்.. குக்கிகள் கிறித்துவர்களாக மாறினார்கள் என்ற சுவாரஸ்யமான வரலாற்றினை தெரிந்துக் கொள்ளவதின் மூலம், மணிப்பூரில் காலம்காலமாக இருந்துகொண்டே இருக்கும் இனக்க*லவரத்தை பற்றிய தெளிவான பார்வையை அடைய முடிகிறது..

முற்காலத்தில் இரு இனமக்களும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருந்திருக்கிறார்கள்.. பர்மியர்கள் மற்றும் பிரிட்ஷாரின் படையெடுப்பை தொடர்ந்து எல்லாமே மாறிவிட்டது.. அதைத்தவிர வங்காள முஸ்லிம்கள் எவ்வாறு மணிப்பூருக்குள் நுழைந்தார்கள், அடிமையாக இருந்த அவர்கள் ககெம்பா என்ற மன்னர் பர்மாவின் மீது போர்த்தொடுத்த போது அவருக்கு உதவி மணிப்பூருக்குள் சுதந்திரமாக வாழும் உரிமையைப் பெற்றதை குறித்தும் விளக்கியுள்ளார்…

பிரிட்டிஷ் காலனியாக விளங்கிய மணிப்பூர் இந்தியாவிற்குள் இணைப்பதற்கு பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு நடந்துள்ளது.. மன்னர் மட்டும்தான் உடன்படிக்கையில் கையெழுத்து போட்டிருக்கிறார் ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளவே இல்லை.. மணிப்பூர் தனி நாடு என்ற எண்ணமே மக்களுக்கு..

தீவி_ரவாதம்,புரட்சிக் குழுக்கள், ஆயுதப் போராட்டம் எல்லாம் தோன்றி இன்று வரையிலும் போராட்டம் தொடர்கிறது… மெய்தி, குக்கி, நாகா இனமக்களின் தீவி_ரவாத குழுக்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் அலசி ஆராய்ந்து இருக்கிறார்..

மே 3,2023 அன்று மணிப்பூரில் நடந்த இனக்க*லவரம் அனைவருக்கும் தெரிந்ததே.. மணிப்பூரின் ஆதிக்குடிகளான குக்கி மற்றும் மேய்தி இன குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த இனப்:பகை மோதல்.. மெய்தி இனமக்களின் நெடுநாள் கோரிக்கையான, தங்களுக்கும் மணிப்பூரின் ஆதிக்குடிகளுக்கான சலுகைகள் தரப்பட வேண்டும் என்பதே.. மணிப்பூர் அரசின் உயர்நீதிமன்றம் மெய்தி இனமக்களின் கோரிக்கை சரியானதே என்று ஏப்ரல் 19 2020 அன்று மணிப்பூர் உயர் நீதிமன்றம் மீதி இன மக்களை பழங்குடி இன பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் மற்றும் அனைத்து சலுகைகளையும் அவர்களுக்கும் வழங்கலாம் என்ற பரிந்துரை செய்து உத்தரவு வழங்குகிறது..

இந்த உத்தரவினால் கொதிப்படைந்த குக்கி இன மக்களின் போராட்டம் கலவரமாக மாறுகிறது.. இவையே ஊடகங்களின் மூலம் நாம் அறிந்த செய்தி..

மேலோட்டமாக இந்த கலவரம் இரு இனங்களுக்கு இடையே நடக்கும் மோதலாக சித்தரிக்கப்பட்டு இருந்தாலும் இதற்கு பின்னால் இருக்கும் முக்கியமான காரணங்களாக, பொது மக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்படும் காரணங்களான மலைப்பிரதேசங்களின் வளம், சட்ட விரோத போதைப்பயிர் விளைச்சல், ஏற்றுமதி வணிகம் மற்றும் அதனால் கொழிக்கும் குக்கி இனமக்கள், “பாதுகாக்கப்பட்ட வனத்துறைப் பகுதி விரிவாக்கம்” என்ற பெரியரில் அரசு முயற்சிக்கும் இன அழித்தொழிப்பு, நிலம் கையகப்படுத்தும் முயற்சி போன்ற பல்வேறு அரசியல் நகர்வுகளை மிகச் சிறப்பாக அலசி ஆராய்த்திருக்கிரார் ஆசிரியர்…

-சுனிதா கணேஷ்குமார்

(வாசிப்பை நேசிப்போம் குழுமத்தில் வெளியான மதிப்புரை)

மணிப்பூர் கலவரம் நூலினை வாங்க இங்கே செல்க.

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading