சூனியன் முதலில் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி சாகரிகா மீது அபாண்டத்தை சுமத்துகிறான். அதன்பிறகு இன்னொரு கதாபாத்திரத்தை இன்னொரு அபாண்டத்துடன் உருவாக்குகிறான்.
இப்போது அவன் உருவாக்கிய இரண்டாவது கதாபாத்திரம் தன் பங்குக்கு இன்னொரு (மூன்றாவது) கதாபாத்திரத்தை உருவாக்குகிறது. அந்த உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் உண்மையென முதலில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் சாட்சி சொல்கிறது.
இந்த அபாண்டங்களை உண்மை என நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது பக்கங்களில் அதைப் பகிர்ந்து விவாதிக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் நடக்கும் அவலங்களை அப்படியே நீலநகரத்தில் நடப்பதாகப் படம்பிடித்துக் காட்டுகிறார்.
இவை அனைத்தையும் கோவிந்து படிக்கிறான். அவன் அடுத்து என்ன செய்யப் போகிறான்? சாகரிகா எப்படி பதிலடி தரப்போகிறாள்? சூனியனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? கலாசார செயலாளர் பதவி சாகரிகாவுக்கு கிடைக்குமா? என்ற கேள்விகளுடன் நீலநகரத்தில் காத்திருக்கிறேன்.