கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 22)

கோவிந்தன் ஒரு பக்கம் சாகரிகாவுடன் இணைவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்க, திடீரென அவனது நிழலுக்கு அவள்மீது மையல் வந்துவிடுகிறது. அது தனித்துவிடப்பட்டதனால் இப்படியொரு விஷயம் அதற்கு நிகழ்ந்திருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது.
இப்போதைக்கு கோவிந்தனின் பெயரில் அது நகரத்து பிரஜை ஆகிவிட்டபடியால் அது அந்த வெள்ளைப் பலகையில் நகரத்தாரின் கவனத்தை ஈர்க்க ஒரு பதிவு போடுகிறது.
சமூகவலைத்தளங்களின் போலி இரக்கம் கொண்டவர்கள் போல சிலர் அதனிடம் வந்து ஏதேதோ சொல்கிறார்கள்.
சாகரிகாவும் இதை படிக்கிறாள். அவளுக்கு ஏற்கனவே இருக்கும் எத்தனையோ குழப்பங்களில் இது ஒன்று பெரியதாக இல்லை.
ஷில்பா அவளுக்கு உதவுவதாக வாக்களிக்க இருவரும் நன்கு குடித்து களிப்புடன் இருக்கையில் கோவிந்தனின் நிழல் அங்கேயே வந்து விடுகிறது.
அதனையும் குடிக்கவைத்து அங்கேயே தங்க வைக்கிறாள் அவள். அவளுக்கு அதன் மீது காதலெல்லாம் இல்லை. நாளை காலை தற்கொலை செய்து கொள்ளப் போகிற செய்கையை தடுத்துவிட்டால் போதும் என அவள் நினைத்திருக்கலாம்.
Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!